தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பராயம் குறைந்த பிள்ளைகளை காட்டுகின்ற 50 ஆபாச இணையத்தளங்கள் கண்டுபிடிப்பு!

Go down

பராயம் குறைந்த பிள்ளைகளை காட்டுகின்ற 50 ஆபாச இணையத்தளங்கள் கண்டுபிடிப்பு! Empty பராயம் குறைந்த பிள்ளைகளை காட்டுகின்ற 50 ஆபாச இணையத்தளங்கள் கண்டுபிடிப்பு!

Post  meenu Wed Mar 13, 2013 5:59 pm


0


பாடசாலை சீருடை அணிந்த பராயம் குறைந்த பிள்ளைகளை காட்டுகின்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆபாச இணையத்தளங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசேட பொலிஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இணையத்தளத்தை பார்வையிடுவதற்கான வசதிகள் இணைக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினிகள் மூலம் இந்த இணையத்தளங்களை யாரும் பார்வையிட முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் கூறினார்.

இந்த இணையத்தளங்களில் தோன்றியுள்ளவர்களின் ஆளடையாளத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறான இணையத்தளங்கள் பற்றிய விவரமான அறிக்கையை பார்வையிட்ட பத்தரமுல்ல சிறுவர்கள் நீதிமன்ற நீதவான் எம்.எம்.ஜயசேகர, ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக இந்த அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்புமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு பணித்தார்.

இந்த ஆபாச இணையத்தளங்களில் தரவேற்றம் செய்யப்பட்ட ஆபாசக் காட்சிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இந்த கட்டளையை பிறப்பித்தார்.
பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியக பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ்; இந்த ஆபாச இணையத்தளங்கள் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum