தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓடும் ரெயிலில் மாணவிகள் ‘ஈவ்டீசிங்’! மாணவர் ஜெயிலில் அடைப்பு! – படம் இணைப்பு

Go down

ஓடும் ரெயிலில் மாணவிகள் ‘ஈவ்டீசிங்’! மாணவர் ஜெயிலில் அடைப்பு! – படம் இணைப்பு Empty ஓடும் ரெயிலில் மாணவிகள் ‘ஈவ்டீசிங்’! மாணவர் ஜெயிலில் அடைப்பு! – படம் இணைப்பு

Post  meenu Wed Mar 13, 2013 2:13 pm

கொச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ரெயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் கிரண் (வயது 24), அகில் (28), ஜோஸ் (21) ஆகியோர் மாணவிகளை கிண்டல் செய்து ஈவ்டீசிங்கில் ஈடுபட்டனர். அவர்களை அந்த மாணவிகள் மற்றும் சில பயணிகள் கண்டித்தனர். ஆனாலும் மாணவர்கள் கேலி கிண்டலை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் சில மாணவிகள் அந்த மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கிரண், அகில், ஜோஸ் ஆகியோர் தங்களிடம் இருந்த பிளேடால் அந்த மாணவிகளை வெட்டினார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பயணிகள் அந்த மாணவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் ரெயில் நிலையம் வந்து விட்டதால் அவர்கள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி கொச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 3 மாணவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அகிலும், ஜோசும் கோர்ட்டில் சரண் அடைந்து விட்டனர். கிரண் மட்டும் தலைமறைவாகி விட்டார்.

அவர் வசித்த பாறசாலை தர்சன் பகுதிக்கு சென்று விசாரித்தப்போது அவர், குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதற்கிடையில் அமரவிளை என்ற இடத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன் கிரண் பதுங்கியிருப்பதாக கொச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு சென்று கிரணை கைது செய்து கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி மாணவர் கிரண் சிறையில் அடைக்கப்பட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓடும் ரெயிலில் வீசி கொல்ல முயன்ற பெண் குழந்தையை தத்தெடுக்க பிரபுதேவா, லாரன்ஸ் விருப்பம்
» வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு
» 18 வயது மாணவனுட‌ன் ஓடிய ‌திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
» க‌ள்ள‌க்காதலு‌க்காக கணவனை கொ‌ன்று புதைத்த மனை‌வி! (படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum