தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம்

Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம் Empty இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம்

Post  meenu Wed Mar 13, 2013 1:01 pm

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புழல் ஜெயில் கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இன்று காலை 7.30 மணி அளவில் தண்டனை கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது 23 கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை செய்ய வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம்
» அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» ஓடும் ரயிலில் லுங்கியை மடித்து கொலவெறி குத்தாட்டம்: 4 பேர் புழல் சிறையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum