தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாக்லாந்து தீவு யாருக்கு சொந்தம்?: இங்கிலாந்துடன் இருக்க 99 சதவீதம் மக்கள் ஆதரவு - அர்ஜெண்டினா கடும் எதிர்ப்பு

Go down

பாக்லாந்து தீவு யாருக்கு சொந்தம்?: இங்கிலாந்துடன் இருக்க 99 சதவீதம் மக்கள் ஆதரவு - அர்ஜெண்டினா கடும் எதிர்ப்பு Empty பாக்லாந்து தீவு யாருக்கு சொந்தம்?: இங்கிலாந்துடன் இருக்க 99 சதவீதம் மக்கள் ஆதரவு - அர்ஜெண்டினா கடும் எதிர்ப்பு

Post  meenu Wed Mar 13, 2013 12:59 pm

பாக்லாந்தை அர்ஜெண்டினாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர் நடந்தது. இப்போது அர்ஜெண்டினா இந்த பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அர்ஜெண்டினா திடீர் என பாக்லாந்து மீது படையெடுக்கலாம் என கருதி இங்கிலாந்து ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாக்லாந்து மக்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய இங்கிலாந்து ஓட்டெடுப்பு நடத்தியது. அதில் 99.8 சதவீத மக்கள் இங்கிலாந்துடனேயே இருக்க விரும்புவதாக வாக்களித்து உள்ளனர். ஆனால் இதை அர்ஜெண்டினா ஏற்க மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் கூறியதாவது:-

இந்த ஓட்டெடுப்பை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது சட்டப்பூர்வமான ஓட்டெடுப்பு இல்லை. பாக்லாந்து எங்களுக்கு சொந்தமானது. இந்த பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum