தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாத மேடை:

Go down

விவாத மேடை: Empty விவாத மேடை:

Post  meenu Tue Mar 12, 2013 1:10 pm

நாடு முழுவதும் மதுவிலக்கை அமலாக்க முடியுமென்றால் தமிழ்நாட்டிலும் முடியும். அது எந்நாளும் நடக்காது. சங்க காலத்திலேயே அரசன் முதல் ஆண்டி வரை குடித்துள்ளனர். அரசனே தன் வீரர்களுக்குக் கள்ளை வழங்கியதாக இலக்கியங்கள் பேசுகின்றன. இப்போதே பக்கத்து மாநிலங்களிலிருந்து மது பாய்கிறது, கள்ளச்சாராயம் ஆங்காங்கே கோலோச்சுகிறது. இந்த நிலையில் பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை.

புதூ.சு. முருகையன், திருப்பத்தூர்.



சாத்தியமில்லை

தற்போதுள்ள சூழ்நிலையில் பூரண மதுவிலக்கென்பது சாத்தியமற்றது. மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 22,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாய்வரை நேரடியாக வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தி வருவாயை இழக்க ஆட்சியாளர்கள் இளித்தவாயர்கள் அல்ல.

வி. கண்ணன், திருப்புனவாசல்.



புலால் உண்பதுபோல

சமுதாயத்தில் இப்போது புலால் உணவு கொள்வோர், புலால் மறுப்போர் இருப்பதைப் போலத்தான் மது அருந்துவோர், மது விலக்குவோர் என்று இரு பிரிவு காணப்படுகிறது. மது குடிப்பவர்கள் அதன் தீமைகளைத் தாங்களாகவே எண்ணிப்பார்த்துக் கைவிட வேண்டும். சட்டம் இயற்றி இதைத் தடுக்க முடியாது, மனம் மாறினால் சாத்தியம்.

எஸ்.ஜி. இசட்கான், திருப்பூர்.



40 ஆண்டுக் குடி!

திராவிடக் கட்சிகளின் 40 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழர்கள் குடிக்கப் பழகிவிட்டார்கள். 15 வயது முதல் 70 வயதுவரை உள்ள 3 தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். எனவே மதுவிலக்கை அமல்செய்வது கடினம். ஆனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மதுவிலக்கை அமல்செய்தே தீர வேண்டும்.

ஐ.ஜெயராஜ், இராயப்பன்பட்டி.



நடைமுறைப்படுத்த முடியாது

தமிழகத்தில் இனி பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி மீறிச் சட்டங்கள் கொண்டுவந்தால் அது கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் காவல்துறையின் கறுப்பு ஆடுகளுக்கும்தான் பயனாக அமையும். விஷச்சாராய மரணங்கள் அதிகரிக்கும். அதே சமயம் மது விற்பனையில் இலக்கு நிர்ணயிக்காமல், மதுபானம் வாங்க வயது வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைக் கட்டுக்குள் வைக்க அரசு முயல வேண்டும்.

தமிழ்வளம்விரும்பி, பாப்பாக்குடி.



உலகளாவியது

மதுப்பழக்கம் உலகளாவியது. மக்களாட்சி நிலவும் இந்தியாவில் பூரண மதுவிலக்கு சாத்தியம் இல்லை. ரிக் வேத காலத்திலேயே மதுப்பழக்கம் இருந்தது. சங்க இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன. ஆல்கஹால் அடிப்படையிலான அன்னியவகை மதுபானம் தீமைதரவல்லது. கள்ளுக்குத் தடை விதிப்பது சுயநலமானது. சாராய ஆலைகளில் எத்தனால் தயாரிப்பது விவேகமானது.

சி.வையாபுரி, தலைவாசல்.



முதல்வரால் முடியும்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவால்தான் முடியும். மது விற்பனையால் இருபதாயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. அதை இழக்க முடியாது என்கிறார்கள். மணல் கொள்ளையில் தனியார் ஈடுபட்டபோது அதைத் தடுத்து அரசுக்கு வருவாயை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. அரசின் செலவுகளைக் குறைப்பதன் மூலமும் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை அவர் ஈடுகட்டுவார். சமுதாய நலனும் இளைஞர்களின் நலனும் அடங்கிய புனிதச் செயல்தான் பூரண மதுவிலக்கை அமல் செய்வது; அதைச் செயல்படுத்த முதல்வரால் மட்டுமே முடியும்.

மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.



முடியும் முடியும்

எத்தனையோ அரசர்கள் ஆண்டுகொண்டிருந்த இந்தியா ஒருங்கிணைந்த ஜனநாயக நாடாக மாறவில்லையா? ஒற்றுமையாகப் போராடி சுதந்திரம் வாங்கவில்லையா? தலைவிரித்தாடிய ஜாதிக்கொடுமைகள் மாறி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையா? எல்லாத் தரப்பினரும் படித்து முன்னேற வழி பிறக்கவில்லையா? வறிய நாடாக இருந்தாலும் விண்வெளித்துறையில் வல்லரசுகளுடன் போட்டி போடும் நிலைமை ஏற்படவில்லையா? தமிழக அரசும் வீடுகளில் இருக்கும் பெண்களும் இணைந்து மனதுவைத்தால் பூரண மதுவிலக்கு அமலும் சாத்தியம்தானே?

இரா. ரெங்கசாமி, வடுகப்பட்டி.



தனிமனிதருக்கல்ல

பூரண மதுவிலக்கை நிறைவேற்ற முடியும். மதுவினை தனி நபர் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது. குடும்பப் பிரச்னையாகவும் சமுதாயப் பிரச்னையாகவும் பார்க்க வேண்டும். நமது சமுதாயத்தில் ஏற்படும் மோதல்களுக்கும் விபத்துகளுக்கும் சச்சரவுகளுக்கும் பண்பாட்டுச் சீரழிவுக்கும் சுகாதாரக் கேட்டுக்கும் மதுதான் காரணம் என்பதால் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் மதுவிலக்கு சாத்தியமே. சமுதாயத்தின் வளர்ச்சிப் பார்வையில் உற்று நோக்கினால் பூரண மதுவிலக்கை நம்மால் நிறைவேற்ற முடியும்.

கோ. இக்னி, (அய்க்கஃப்), திருச்சி.



லாட்டரியை ஒழித்தவர்

ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிய லாட்டரிச் சீட்டு, கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்துப் போன்றவற்றைத் தடை செய்து ஒழித்தவர் நம்முடைய முதல்வர் ஜெயலலிதா. மது விற்பனையைத் தடைசெய்து மாற்று வழியைக் காண்பது அவருக்குப் பெரிய விஷயம் அல்ல. அரசு அதிகாரிகள் வருவாய் குறைந்துவிடும் என்று காட்டும் பூச்சாண்டியை முதல்வர் புறந்தள்ளி, மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும். இப்போது மதுவிற்பனையை அரசே மேற்கொண்டிருப்பதால் மதுவிலக்கை அமல் செய்வதும் மது விற்பனையை அறவே நிறுத்துவதும் மிகவும் எளிது. தமிழகத்தில் எங்கும் மக்கள் மதுக்கடைகள் வேண்டும் என்று போராடுவதில்லை.

மு.க. இப்ராஹிம், வேம்பார்.



மனமிருந்தால்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியுமா என்று வினா எழுப்பாமல் மனவுறுதியோடு தமிழக அரசு முயன்றால் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர முடியும். மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

""அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்'' என்பது வள்ளுவர் வாக்கு.

மனித வளத்தை மேம்படுத்தாத, மக்கள் நலத்தைக் கெடுக்கும் மதுவை அரசே விற்கலாமா? தமிழக அரசு விரைவில் மதுவிலக்கைக் கொண்டுவந்து மக்கள் நலத்தைக் காத்து நல்ல பெயர்பெற வேண்டும்.

ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.



புகழ் பெறவேண்டும்

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோதச் செயல்கள், வாகன விபத்துகளுக்கு மதுதான் காரணம் என்று நாள்தோறும் செய்திகள் வெளியாகின்றன. மதுவுக்கு அடிமையாகி அண்டா, குண்டா, தாலி உள்பட அனைத்தையும் அடகுவைப்பதால் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் நாசமாகிவருகின்றன. பெண்களும் குழந்தைகளும் ஆண்களின் குடிப்பழக்கத்தால் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர். கருணாநிதி கட்டிய புதிய சட்டசபை வளாகத்தை மக்கள் நலனுக்காக மருத்துவமனையாக மாற்றியுள்ள முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி கொண்டுவந்த மதுக் கடைகளையும் ஒழித்து மக்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்.

ஜி.ரெங்கநாயகலு, சென்னை.



படிப்படியாகக் கூடாது

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதைவிட ஒரேயடியாக அமல்படுத்த வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் குறையும், டாஸ்மாக் பணியாளர்கள் வேலையிழப்பர், மது வியாபாரிகள் தொல்லை தருவர், இலவசங்களுக்கான நிதி குறையும். ஆனால் மதுவை அனுமதிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, மோதல்கள் போன்ற சமூகக் குற்றங்கள் குறையும். குடும்பங்களில் பெண்கள், குழந்தைகளின் அழுகுரல்கள் குறையும். குடும்ப வருமானம் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கிடைக்கும். நல்லொழுக்கம் வளரும். பிற மாநிலத்தவரும் பிற நாட்டவரும் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாகவே பேசுவர். உள்ள உறுதியும் சமூக நலனில் அக்கறையும் ஒருங்கே கொண்ட முதல்வருக்கு முழு மதுவிலக்கைக் கொண்டுவருவது சாத்தியமே.

திருமதி டி. சிவா, காஞ்சிபுரம்.



காவிரி வெற்றிபோல

முடியாது என்றுதான் அனைவரும் சொன்னோம், முயற்சியோடு முனைப்பும் சேர்ந்ததால் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பெற்றது. சென்னை மாநகருக்கு வீராணம் தண்ணீரைக் கொண்டுவந்தார். "தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023' என்ற ஆவணத்தை வெளியிடுகையில் மூன்று முக்கிய இலக்குகளில் ஒன்றாக, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மனிதவள மேம்பாட்டுக் குறியீடுக்கு இணையாக உயர்தரம் வாய்ந்த சமூக வளர்ச்சியைத் தமிழ்நாட்டிலும் கொண்டுவருவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா. பூரண மதுவிலக்கை அமல் செய்தால்தான் இது சாத்தியம். "இவர்' நினைத்தால் எதுவும் நடக்கும், பூரண மதுவிலக்கு இவரால்மட்டும்தான் சாத்தியம்.

இரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.



எத்தனை நாள் முடியும்?

பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாததால் அங்கு சென்று குடித்துவிட்டு வருவார்கள் என்றொரு காரணம் கூறப்படுகிறது. அப்படி எத்தனை பேர் செல்வார்கள், எத்தனை நாள்களுக்கு அவர்களால் செல்ல முடியும்? அருகிலேயே மதுக்கடைகள் இருப்பதால்தானே நினைத்த நேரத்தில் பள்ளிக்கூட மாணவர்கள்கூட போய் குடித்துவிட்டு வருகிறார்கள். சில இடங்களில் கள்ளச்சாராயம் தலைகாட்டலாம். காவல்துறையால் அவற்றைக் கட்டுப்படுத்திவிட முடியும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழர்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைக்க அரசு முன்வர வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum