தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நினைவாற்றல் நினைவாற்றல்

Go down

நினைவாற்றல் நினைவாற்றல் Empty நினைவாற்றல் நினைவாற்றல்

Post  meenu Tue Mar 12, 2013 1:07 pm



நினைவாற்றல் - புவனாபாலு; பக்.160; ரூ.100; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17.

மனித வாழ்க்கையில் நினைவாற்றலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல், நினைவாற்றலை விருத்தியடையச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கி, 20 அத்தியாயங்களை நூலாசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் தொழில் அல்லது பிற துறைகளில் வெற்றி என்பது நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் ஒருவரது மதிப்பு அவரது நினைவாற்றலின் தரத்தைப் பொருத்தே அமைகிறது என்பதையும் பல்வேறு அறிஞர்களை மேற்கோள்காட்டி விளக்கியிருக்கிறார்.

"பயன் மற்றும் பயிற்சி', "மறு பரிசீலனை மற்றும் பயிற்சி', "கவனமும் ஆர்வமும்', "அறிவார்ந்த இணைப்பு' ஆகியவை நினைவாற்றலின் விருத்திக்கும் முக்கியமான மூன்று தேவைகள் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான, இடையறாத, நீண்ட பயிற்சியினால் மட்டுமே நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறது இந்த நூல்.

ஒன்றில் ஆர்வம் குறைவாக இருப்பதுதான் நினைவாற்றல் குறைவுக்குப் பொதுவான காரணமாகும். நமக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை இயல்பாகவே நாம் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

அறிவாற்றலின் திறவுகோல் நினைவாற்றல்தான் என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum