தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள் குழந்தை பேசுவதற்கு நாளாகிறதா?

Go down

உங்கள் குழந்தை பேசுவதற்கு நாளாகிறதா? Empty உங்கள் குழந்தை பேசுவதற்கு நாளாகிறதா?

Post  meenu Tue Mar 12, 2013 1:04 pm



குழந்தையின் மழலையை கேட்க இனிமை என்பார்கள். ஆனால் சில குழந்தைகள் 5 வயதாகியும் பேசாமல் இருப்பர். பெற்றோருக்கு உண்மையிலேயே இது வருத்தம் தரக்கூடிய விஷயமாகும்.

பெரும்பாலும் குழந்தைகள் 12 மாதம் முடிவதற்குள்ளே மழலை பேச்சு பேச ஆரம்பித்து விடும். சில குழந்தைகள் 3 வயதில் பேசும். சிலர் 5 வயதாகியும் வாயை திறக்க மாட்டார்கள். என்னடா குழந்தை பேசாமல் இருக்கின்றதே என்று கவலை படாமல், இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவராக இருப்பார்கள். குழந்தையை பாதுகாக்க ஆட்களை நியமித்து விடுவர். குழந்தையை பாதுகாப்பவர் நேரத்திற்கு உணவளிப்பது, பராமரிப்பது கடமையாக செய்து விட்டு சென்று விடுவர். ஆனால் அந்த குழந்தையுடன் பேசுவதோ, சிரித்து விளையாடுவதோ செய்வதில்லை. இதனால் குழந்தையின் மனநிலை இறுக்கமடைந்து சோர்வாக காணப்படும். பெற்றோருடன் பேசி, பழகுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது சில குழந்தைகளுக்கு.

சிலரது வீட்டில் தாய் ஒரு மொழியும், தந்தை வேறு மொழியும் பேசுவதுண்டு. இதனால் அந்த குழந்தை புரிந்து பேசுவதற்கு சில வருடங்கள் ஆகும். குழந்தை தனியாக வளர்வதை விட, கூட்டுக் குடும்பத்தில் வளர்வது நல்லது. அனைவரிடமும் பழகும் போது குழந்தையின் மனநிலை இளகுவாகவும். சரளமாக பேசுவதற்கும் முயற்சிக்கும். உறவினர்களுடன் பழகுவதால் மற்றவர்களிடம் எப்படி பழகுவது, பேசுவது என்று சிறு வயதிலேயே உணரும்.

சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே காது கேட்கும் திறன் இல்லாமல் இருக்கும். சிலருக்கு தொன்டையில் புண், தொன்டை கோளாறு எற்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தை பிறந்து 5 வயதிற்கு மேல் பேசாமல் இருந்தால், குழந்தையை பராமரிப்பு மருத்துவரிடம் அழைத்து சென்று தகுந்த சிகிச்சை பெறலாம்.

குழந்தைகள் நன்றாக பேசும் வரை, பெற்றோர்கள் குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பயனுள்ள விஷயங்களை சிறு வயது முதலே சொல்லி கொடுத்து பழக்கினால் பேசும் திறன் அதிகரிப்பதோடு, கேட்கும் திறனும் அதிகரிக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum