தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயக்கமில்லாமல் சபாஷ்!

Go down

தயக்கமில்லாமல் சபாஷ்! Empty தயக்கமில்லாமல் சபாஷ்!

Post  meenu Tue Mar 12, 2013 12:58 pm



ஓரு கலைஞரின் ஏதாவதொரு கச்சேரியை மட்டுமே எடுத்துக் கொண்டு அவரை எடை போட்டுவிட முடியாது என்பதால் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி இசை உலாவில் தீக்ஷிதா வெங்கட்ராமனின் நிகழ்ச்சியை விமர்சித்தபோது "ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்!' என்று குறிப்பிட்டிருந்தோம். அதுமட்டுமல்ல, வளர வேண்டிய கலைஞர் என்பதால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு அளிப்பது என்றும் தீர்மானித்திருந்தோம்.

÷வியாழனன்று காலை 9 மணிக்கு மயிலாப்பூர் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவில் தீக்ஷிதா வெங்கட்ராமன் பாடியபோது அவருக்கு முன்னாலேயே நாம் ஆஜர். அன்றைய நிகழ்ச்சிக்கு திருமருகல் தினேஷ்குமார் வயலின், அக்ஷய்ராம் மிருதங்கம். இவர் உமையாள்புரம் சிவராமனின் சீடர்.

÷"ஜலஜாக்ஷி', "ஹம்சத்வனி' வர்ணத்துடன் தொடங்கிய தீக்ஷிதாவின் கச்சேரியில் அடுத்த தாக வந்தது "பஹுதாரி'. "ப்ரோவபாரமா'தான் சாகித்யம். ஸ்வரம் பாடினார். அந்த "பஹுதாரி'யிலேயே அத்தனை பேரையும் கட்டிப்போட்டுவிட்டது அவரது சாரீரம். என்ன ஒரு குரல்வளம்.

÷பஞ்சமுக ஆஞ்சநேயர் ஜயந்தி விழா என்பதால் ஸ்வாதித் திருநாள், "சாவேரி' ராகத்தில் இயற்றிய "ஆஞ்சநேயா, ரகுராம தூதா' என்கிற சாகித்யத்தை, "சாவேரி' ஆலாபனைக்குப் பிறகு பாடினார். விளம்ப காலத்தில் பாடினாலும்கூட தீக்ஷிதாவின் குரல்வளமா, பாவமா தெரியவில்லை, அந்தக் காலை நேரத்தில் அவ்வளவு சுகமாக இருந்தது. தொடர்ந்தது, "ஹிந்தோளம்'. அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனையிலிருந்து "ராமனுக்கு மன்னன் முடி' என்கிற பாடல். அதில் "பட்டம் கட்ட' என்ற இடத்தில் கல்பனா ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, தீட்சிதரின் "நரசிம்ம ஆகச்ச' என்கிற "மோகன' ராக சாகித்யத்தையும் பாடினார்.

÷கடந்த சீசனில் கேட்ட தீக்ஷிதாவுக்கு இந்த சீசனில் ஏகப்பட்ட முதிர்ச்சி தெரிகிறது. நிகழ்ச்சியை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உத்தி நன்றாகவே கைவந்திருக்கிறது. அன்றைய நிகழ்ச்சியின் முக்கிய உருப்படியாக "தர்மவதி'யைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவருடைய முழுத் திறமையும் "தர்மவதி' ராக ஆலாபனையில் வெளிப்பட்டது. பிருகாக்கள் மடை திறந்தாற்போல் உருண்டோடி வருகின்றன. ராக லட்சணங்கள் அப்பழுக்கில்லாமல் வெளிப்படுகின்றன. சுருதியும் லயமும் அவரிடம் இயல்பாகவே ஒன்றிவிட்டிருக்கின்றன. அதற்குப் பிறகு அவரது சங்கீதத்தின் சுகத்தை விவரிக்கவா வேண்டும்.

÷மைசூர் வாசுதேவச்சாரின் "பஜன úஸயராதா'தான் சாகித்யம். அதில் பல்லவியிலேயே நிரவல் அமைத்துக்கொண்டு ஸ்வரமும் பாடித் தொடர்ந்து தனியாவர்த்தனத்துக்கு நேரமும் ஒதுக்கினார்.

÷தொடர்ந்து நாலைந்து துக்கடாக்கள். "தினம் அநுமனை நினை மனமே' (பீம்ப்ளாஸ்), "கண்ணன் என்றதுமே' (ராகமாலிகை), "நரஹரிதேவா ஜனார்த்தனா' (யமன் கல்யாணி) என்று பாடிவிட்டு, விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்து "சாந்தாகாரம் புஜகசயனம்' என்கிற ஸ்லோகத்தை "பாகேஸ்ரீ', "சஹானா', "பெஹாக்', "சிந்துபைரவி' ஆகிய ராகங்களில் பாடிவிட்டு நிறைவாக "சிந்துபைரவி'யில் "வெங்கடாசல நிலையம்' பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

÷முந்தைய நிகழ்ச்சி சுரத்து இல்லாமல் இருந்தது என்கிற நமது விமர்சனத்தை இந்தக் கச்சேரி வாபஸ் வாங்கிக் கொள்ள வைத்துவிட்டது. ÷அடுத்த ஸ்லாட்டுக்கு புரமோஷன் தரப்பட வேண்டிய கலைஞர் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum