தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

Go down

அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை Empty அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

Post  meenu Tue Mar 12, 2013 12:56 pm



அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியின் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி.

முன்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியுற்றது. தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4-3 என்ற கோல் கணக்கிலும், அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் முக்கியமான கட்டத்தில் எதிரணி கோலடிக்க, வெற்றி வாய்ப்பு நழுவியது.

அதனால், இந்த ஆட்டத்தில் விழிப்புடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்க வைக்க இந்தியா போராடும்.

6 அணிகள் பங்கேற்றுள்ள இப் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளைப் பெற்றுள்ள மலேசிய அணி 2-ம் இடத்தில் உள்ளது. 3 புள்ளிகளுடன் கொரிய அணி 3-ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 4-ம் இடத்திலும் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் வெற்றிக் கணக்கைத் தொடங்காத இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் கடைசி இரு இடங்களில் உள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum