தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Go down

புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு Empty புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Post  meenu Tue Mar 12, 2013 12:23 pm

இலங்கை அரசின் தமிழ் இன படுகொலை தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) இன்று (செவ்வாய்கிழமை) நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் புதுவையில் ஓடவில்லை.

புதுவையை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதேவேளையில் புதுவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்கள் ஓடின. அதேபோல் புதுவைக்கு வரும் தமிழக அரசு பஸ்கள் புதுவை பஸ் நிலையம் வந்தன. மேலும் புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் புதுவை பஸ்நிலையம் வந்து சென்றன.

ஆனால் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தமிழகம் மற்றும் புதுவை அரசு பஸ்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். தமிழக அரசு பஸ்களை மாநிலத்தின் எல்லை வரை போலீசார் பாதுகாப்பு அளித்து அழைத்து சென்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அதிகாலையில் திறக்கப்படும் டீக்கடைகள் கூட திறக்கவில்லை. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லிதோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகுளும் இயங்கவில்லை. டெம்போக்கள் முற்றிலுமாக ஓடவில்லை. அதேவேளையில் ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் ஓடின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர் வருகை குறைவாக இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

காலை மற்றும் மதியம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இன்று காலை 7.30 மணியளவில் பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் சாலை வழியாக தமிழக அரசு பஸ் உப்பளம் டெப்போவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பஸ் சிங்காரவேலர் சிலை அருகில் வந்தபோது மறைந்திருந்த மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது.

இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடிகள் முழுவதும் நொருங்கியது. இதேபோல் விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு தமிழக அரசு பஸ் காலை 8 மணியளவில் வந்தது. பஸ் புதுவை நெல்லிதோப்பு சிக்னல் அருகே வந்தபோது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொருங்கியது. பந்தையொட்டி நகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum