கரிசலாங்கண்ணிக் கீரை அடை
Page 1 of 1
கரிசலாங்கண்ணிக் கீரை அடை
என்னென்ன தேவை?
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை - 1 கட்டு,
பச்சரிசி - 200 கிராம்,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
மிளகு - 20,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகளை 3 மணி நேரம் ஊற வைத்துக் கரகரப்பாக அரைக்கவும். கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். வெறும் கடாயில் மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்து அடை மாவில் சேர்க்கவும். அதே கடாயில் கரிசலாங்கண்ணிக் கீரையை மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாயையும் அதில் சேர்த்து வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை சின்னச் சின்ன அடைகளாக வார்த்து, மேலே கீரை, வெங்காயக் கலவையைத் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரு புறமும் நன்கு வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum