தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
Page 1 of 1
தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
என்னென்ன தேவை?
அரிசி - 2 கப் (பாசுமதி (அ) பிரியாணி அரிசி தேவையில்லை),
தக்காளி - 2 பெரியது (பொடியாக நறுக்கியது),
வெங்காயம் - 2 பெரியது (பொடியாக நறுக்கியது),
தேங்காய்ப்பால் - 2 கப்,
சீரகம் (அ) சோம்பு - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை -1,
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
புதினா, கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது),
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெண்ணெய், சிறிதளவு எண்ணெயை (கால் கப்) சூடாக்கி, சீரகம் அல்லது சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். சீரகம் வெடித்தவுடன், வெங்காயம் சேர்க்கவும். பிரவுன் நிறம் ஆகும்வரை வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும். தக்காளித் துண்டுகளையும் சேர்த்து பேஸ்ட் மாதிரி வரும் வரை வதக்கவும்.
அரிசியைக் கழுவி ஊறவைத்து வடிகட்டி பிறகு தயாராக இருக்கும் பேஸ்ட்டில் கொட்டி வதக்கவும். பிறகு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தபின் மீதி தண்ணீரையும் சேர்த்து, அடுப்பை சிறிதாக்கி, மேலே இறுக மூடிவிடவும். சுமார் 30 நிமிடங்களில் ரெடியாகிவிடும்.
கேரட், வெள்ளரிக்காய் அல்லது வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால் கஞ்சி
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால் கஞ்சி
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum