தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் எடையைக் குறைப்பதற்காக வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

Go down

உடல் எடையைக் குறைப்பதற்காக வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா Empty உடல் எடையைக் குறைப்பதற்காக வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

Post  meenu Wed Mar 06, 2013 1:53 pm

* 1) ஓட்ஸ் ஒரு கப்
* (2) தக்காளி 1
* (3) பெரிய வெங்காயம் 1
* (4) இஞ்சி சிறிதளவு
* (5) பூண்டு
* (6) காரட் 1
* (7) பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
* (Cool கொத்தமல்லி சிறிதளவு
* (9) உப்பு தேவைக்கேற்ப
* (10) எண்ணெய் இரண்டு ஸ்பூன்
* 11) கடுகு தாளிக்க
* (12 ) பெருகாயம் சிறிதளவு
* (13 ) உளுத்தம் பருப்பு


* முதலில் எண்ணெய் சேர்க்காமல் ஓட்ஸை நன்கு வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* கடுகு பொறிந்த உடன் சிரிதஈ சிறிதாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருங்காயத்தைப் போடவும்.
* பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி காரட்டைப் போட்டு அத்துடன் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம்& காரட் பச்சை பட்டாணி நன்கு வதங்கியதும் அத்துடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அத்துடன் 3 /4 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஒரு கப் ஓட்ஸைப் போட்டு நன்கு வேகும் வரை கிளறவும்.
* இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
* வேண்டுமானால் ஏதேனும் வெஜிடபிள் ராய்த்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு:
காலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum