தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இது திருவானைக்காவல் ஸ்பெஷல் ஜோடி நெய்தோசை

Go down

 இது திருவானைக்காவல் ஸ்பெஷல் ஜோடி நெய்தோசை Empty இது திருவானைக்காவல் ஸ்பெஷல் ஜோடி நெய்தோசை

Post  meenu Wed Mar 06, 2013 1:15 pm


திருச்சி மலைக்கோட்டையின் வழுவழுப்பான பாறையில் நின்று மேற்கே பார்த்தால், விரிந்து கிடக்கும் காவிரியின் வனப்பைத் தாண்டி, சீரான இடைவெளியில் 2 கோபுரங்கள்வான்முட்டி நிற்கும். அதில் ஒன்றுதான் திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் & அகிலாண் டேஸ்வரி கோயில். ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் மேல
விபூதி பிராகாரத்தில் இருக்கிறது பார்த்சாரதி விலாஸ்.

அருகில் சென்றாலே நெய்யின் வாசனை நாசியை ஈர்க்கும். உணவகத்தின் உள்ளே சென்று
அமர்ந்துவிட்டால், 2 ஜோடி நெய் தோசை நாவை கிளரச் செய்து வயிற்றுக்குள்இறங்கிவிடும். அலுக்காத உணவு வகைகளில் ஒன்று, தோசை. அதிலும் நெய் வாசனை வருட, உரிய வெஞ்சனங்களுடன் அதை சாப்பிடுவது சுகம்.

பார்த்தசாரதி விலாஸில் நெய்தோசைக்கு, தேங்காய் சட்னி, வெங்காயச்சட்னி, சாம்பார் என 3 தொட்டுக்கைகள்தருகிறார்கள்.இந்த உணவகத்தின் நெய்தோசை விரும்பிகள் திருச்சி தாண்டியும் இருக்கிறார்கள். ‘நெய்தோசை’ என்றாலே மாஸ்டர் இரண்டு தோசைகளை ஜோடியாகத்தான் ஊற்றுவார் . பெரிய வட்டத்தில் சளசளவென நெய் ததும்ப நயமாக சுருட்டி தட்டில் வைப்பதே அழகுதான்.ஒன்றைச் சாப்பிடும் நேரத்தில் இரண்டும் காலியாகி விடுவதுதான்
ஸ்பெஷல். ஜோடி நெய்தோசை 1943ல் பாலக்காடு அனந்தநாராயண அய்யரும், அவரது தம்பி சுப்பிரமணியம் அய்யரும் சேர்ந்து தொடங்கிய உணவகம் இது.

அந்தக்காலத்தில் இங்கு பாசிப்பருப்பு தோசைதான் ஃபேமஸ். காலப்போக்கில் அதற்கு வரவேற்பு குறைய, நெய்தோசையால் அனைவரையும் மயக்கி விட்டார்கள்
பிள்ளைகள்வைத்தியநாதனும், மணிகண்டனும். சுவையைப் போலவே உணவகமும் மரபு மாறாமல் பழசைப் போலத் தான் இருக்கிறது. «த£¬சயின் மிருதுத் தன்மைக்கும், சுவைக்கும் கலவைதான் காரணம் என்கிறார் வைத்தியநாதன். நான்கு பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து. உடைத்த உளுந்து ஆகாது. முழு உளுந்தே சுவைகூட்டும்.

கையில் தொட்டால் வழியாத இறுக்கத்தில்,மாவை அள்ளி விடுகிறார்கள். அதற்கு மேல் கலவை சேர்க்
காமல் கல்லில் ஊற்றி 6 இழுப்பு. லேசாக வேகத் துவங்கும் நேரத்தில், நெய்யைத் தூவுகிறார்கள்.
நெய்யும் கூட வீட்டுத்தயாரிப்புதான். வீட்டிலேயே வெண்ணெய் தயாரித்து, உருக்கி நெய்யாக்குகிறார்கள்.
இது தவிர சுவைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆமாம், பார்த்தசாரதி விலாஸில் இன்னும் விறகடுப்பே எரிகிறது.காலை 4.30 மணிக்கு விழித்து விடுகிறது உணவகம்.

இனிய கானமும், இசையும் காதை வருட, பொங்கலும்,காபியும் ஆவிபறக்க அணி வகுக்கிறது. 7 மணி முதல் 11 மணிவரைக்கும், மாலை 3 மணி முதல், இரவு 8மணிவரைக்கும் ஜோடி நெய்தோசை ஜோடி ஜோடியாக சுடப்படுகிறது. ஈசனின் உடல் படர்ந்துவரும் காவிரிக்காற்று உடலை வருட, பார்த்தசாரதி விலாஸ் நெய்தோசை நாவை வருட, ஈசனின் அருள்மனதை வருட, திருவானைக்காவல் பயணமே மனதையும் உடலையும் வருடும் சிறப்பான அனுபவம்தான்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum