தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிஷ்கினின் தனித்த ஓநாய்

Go down

மிஷ்கினின் தனித்த ஓநாய் Empty மிஷ்கினின் தனித்த ஓநாய்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:04 pm

யார் என்ன சொல்லட்டும்... தமிழ் சினிமாவில் தனித்த திரைமொழி கொண்ட மிகச்சில இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் படங்களின் மூலம் புதிய திரைமொழியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தனது தனித்த அடையாளத்துடன் கமர்ஷியலை கலக்க முயன்றதன் விளைவாக ஒரு மெகா தோல்வி, முகமூடி. அதற்காக மிஷ்கின் அவ்வளவுதான் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் அதிகம்.

இந்த பில்டப்புக்கு காரணம் இருக்கிறது. தனது அடுத்தப் படத்தை சொந்தமாக தயா‌ரிக்கிறார் மிஷ்கின். தயா‌ரிப்பு நிறுவனத்தின் பெயரும், அதற்கான விளக்கமும் அவ‌ரின் படங்களைப் போலவே ஒரு அதி புனைவு.

Lone Wolf Production... இதுதான் மிஷ்கினின் புதிய தயா‌ரிப்பு நிறுவனத்தின் பெயர். ஓநாய்களின் வாழ்க்கை தனக்கு ரொம்பப் பிடிக்கும் அவை பொதுவாக கூட்டமாக இருக்கக் கூடியவை. ஆனால் ஒரு சில மட்டும் கூட்டத்தை விரும்பாமல் தனி ராஜாவாக இயங்கும். இதைவிட ஒரு பொருத்தமான பெயர் எனது தயா‌ரிப்பு நிறுவனத்துக்கு இருக்க முடியாது என தனது பத்தி‌ரிகை குறிப்பில் தெ‌ரிவித்துள்ளார்.

தனித்த ஓநாய்... பெயரைப் போலவே படமும் கம்பீரமாக வெளிவர நமது வாழ்த்துகள்.
மிஷ்கின் தயாரிப்பு நிறுவனம், ஓநாய்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum