தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம்

Go down

விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம் Empty விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம்

Post  meenu Sat Mar 02, 2013 2:16 pm

விண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான விண்டோஸ் 8ஐ மைக்ரொஸாஃப்ட் இன்று வெளியிடுகிறது.




தொடர்புடைய விடயங்கள்







தவிர முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி
செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் இன்று மைக்ரோஸாஃப்ட் வெளியிடுகிறது.
இதற்கு சர்ஃபேஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.

நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில் கோலோச்ச முடியவில்லை.

ஆப்பிள், கூகுள் ஆண்ட்ராய்டு போன்றவற்றுடன் போட்டிபோட விண்டோஸ் திணறிவருகிறது.

மைக்ரோஸாஃப்டின் சறுக்கலை தடுக்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.

தொடுதிரைக் கணினிகள்





விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம் 120619021522_surface304_microsoft

நவீன கைத்தொலைபேசிகளும் டேப்லட் கணினிகளிலும்
தொடுதிரை என்பது எப்படி பிரபலமாகிவிட்டதோ அதேபோல மேஜையில் வைத்து
வெலைபார்க்கும் கணினிகள் மடிக் கணினிகள் ஆகியவற்றிலும் தொடுதிரை பிரபலம்
அடையும் என்று நம்பி மைக்ரோஸாஃப்ட் இந்த பரீட்சையில் இறங்கியுள்ளது.

தொடுதிரை அம்சத்தோடு வரக்கூடிய புதிய தலைமுறைக் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் 8 ஆகும்.

ஆனால் எப்போதும்போல கீபோர்ட் மவுஸ் பயன்படுத்தியும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

தவிர டேப்லட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற சிறிய கணினிகளிலும் இவற்றைப் பயன்படுத்திவிட முடியும்.

வடிவமைப்பில் மாற்றங்கள்


விண்டோஸ் மென்பொருளின் தோற்றத்தில் இம்முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்டோஸின் முந்தைய வடிவங்கள் அனைத்திலும் காணப்பட்ட ஸ்டார்ட் பொத்தான் விண்டோஸ் 8ல் கிடையாது.

மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மென்பொருள் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

தனி நபர் கணினி என்று வரும்போது சந்தையில் மிகப் பெரிய பங்கை மைக்ரோஸாப்ட் வைத்திருக்கிறது.

சரிவில் மைக்ரொஸாஃப்ட்


ஆனால் அவ்வகைக் கணினிகளை மக்கள்
பயன்படுத்துவதென்பது மிக வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஏனென்றால்
இன்றைக்கு கணினியில் செய்யும் அத்தனை வேலையையும் கைத்தொலைபேசியில்
செய்துவிடலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஐபேட், கூகுளின்
அண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கும் ஏராளமான கைத்தொலைபேசிகள், டேப்லட்கள்
போன்றவைதான் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கணினி இயக்க மென்பொருளில் 70 சதவீதமாக இருந்த மைக்ரோஸாப்டின் சந்தைப் பங்கு நான்கே வருடங்களில் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய விண்டோஸ் வந்து அந்தச் சரிவை
சரிகட்டிவிடும் என்று மைக்ரோஸாஃப்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ்
பால்மர் கூறுகிறார்.

விஷப் பரீட்சை?


மைக்ரோஸாஃப் இறங்கியுள்ள இந்தப் பரீட்சையில்
ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. கணினிகள், லேப்டாப்புகள் போன்றவற்றில்
தொடுதிரை இருப்பதை நுகர்வோர் விரும்பாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

மேலும் முந்தைய விண்டோஸ் வடிவங்களுக்கு பெருமளவில்
மாறுபட்டதாக வந்திருக்கின்ற இந்த வடிவத்தைக் கண்டு, பலகாலமாக விண்டோஸ்
பயன்படுத்திவருபவர்கள் குழம்பிப்போய் விண்டோஸிலிருந்து விலகிச்
செல்லக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் 8: சரிவில் இருந்து மீள மைக்ரொஸாஃப்ட் பிரயத்தனம்
» விண்டோஸ் விஸ்டா/ விண்டோஸ் 7 ல் பிரச்சனையா?
» கனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர் மரணம்
» மைக்ரோசாப்ட் விண்டோஸ்
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum