தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குகுனி

Go down

குகுனி                                Empty குகுனி

Post  ishwarya Wed Feb 20, 2013 6:23 pm

என்னென்ன தேவை?
காய்ந்த பட்டாணி - 1 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
தனியா தூள், சீரகத் தூள்,
மிளகாய் தூள் - தலா அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப,
சீரகம் - சிறிது,
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதை 3 கப் தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுதும் சேர்த்து, எல்லா தூள்களையும் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.

பட்டாணி சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 3 முதல் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, திக்கான கிரேவி பதத்துக்கு வந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகளால் அலங்கரித்து அப்படியே சாப்பிடக் கொடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum