தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்

Go down

ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல் Empty ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்

Post  ishwarya Wed Feb 20, 2013 4:56 pm

வந்தது திருவோணம்

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அத்தம் நட்சத்திர நாளில் துவங்கி 10 நாட்கள் வரை இந்த விழா என்பதை ‘அத்தம் பத்தினு பொன்னோணம்’ என்று அழைப்பதுண்டு. தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில் துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. அவிட்டம், சதயம் என்று அதற்கு அடுத்த 2 நாட்கள் வரை ஓணம் விழா தொடர்வதுண்டு. ஓணத்தை அறுவடை திருநாளாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஒரு ஓணம் & பல கதைகள்
ஓணத்திற்கான வரலாறு என்று பரசுராமர், புத்தர், சேரமான் பெருமாள், சமுத்ர பத்மராஜா, தானிய தேவன் என்று பலரது கதைகள், வரலாறுகள் இருந்தாலும் மகாபலி கதையே முக்கியத்துவம் பெறுகிறது. மகாபலி என்பதற்கு ‘பெரிய தியாகத்தை செய்தவன்’ என்பது பொருளாகும்.

பண்டை காலத்தில் இன்றைய கேரளாவை நல்லமுறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன் ஆட்சியில் மக்கள் எல்லோரும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது மகாபலி மீது தேவர்கள் குறை கூறினர். மகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்’ என்ற பெயரில் யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்ய மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.

மூன்றடி மண்

மகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார். அவரை அப்படியே அழுத்தி பூமிக்குள் புதைத்தார் மகா விஷ்ணு. அப்போது மகாபலியின் வேண்டுகோளையேற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மன்னர் வருகிறார்

கேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் வாழும் மலையாள மக்கள் ஓணத்தையொட்டி சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
எங்கும் விழாக்கோலம்

ஓணம் பண்டிகையால் கிராமம், நகரம் என்று அனைத்து பகுதிகளும் களைகட்டி காணப்படுகிறது. படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள், கலாசார ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் என்று கேரளா மாநில பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் அத்தப்பூக் களங்கள் அலங்கரிக்கின்றன.
தமிழகத்தில் விழா

கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை மற்றும் மலையாளிகள் அதிகம் வசிக்கின்ற சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை வழங்கி உள்ளது. இம்மாவட்டங்களிலும் ஓணளண பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், கலாச்சார விழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவோணம் !!! அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்....கேரள மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையான ஓணம், அவர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும்.

இது அறுவடைநாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
மலையாள மாதமான "சிங்கம்"( ஆகஸ்ட் - செப்டம்பர் ) மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திரத்தில், பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் அன்று விழா இன்னும் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.


இதன் சிறப்பாக கேரள மக்கள், தங்கள் இல்லங்கள் முன்பாக அத்தப்பூ கோலமிடுவர். இந்த 10 நாட்களிலும் கேரள பாரம்பரியத்தோடு நடனம், விளையாட்டு ஆகியவை இடம்பெறும். பண்டிகையின் போது ஓணம் சிறப்பு உணவு ( Onam Sadhya) பரிமாறப்படுகிறது.

விழாவின் வரலாறு

முந்தைய காலத்தில் கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் குறையின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். வாமனன் என்னும் குள்ள அவதாரத்தில் வந்து, 3 அடி நிலம் கேட்ட விஷ்ணு பகவானுக்கு, மூன்றாவது அடியாக தன் தலையையே கொடுத்தவன் தான் இந்த மகாபலி.

பின்னர், முக்தி பெற்ற பிறகும் ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காணும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டார். பகவானும் அவ்வாறே அருளினார். இதன்படி ஆண்டுதோறும் நாட்டு மக்களை காண வரும் மகாபலியை வரவேற்கும் பொருட்டு இப்பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மொத்தத்தில், ஓணம் பண்டிகை கேரளாவின் ஓர் அழகுத் திருவிழா !

ஓண சத்ய

ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும். உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.

இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum