தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூகாம்பிகை கோயில் - கொல்லூர்

Go down

மூகாம்பிகை கோயில் - கொல்லூர் Empty மூகாம்பிகை கோயில் - கொல்லூர்

Post  amma Sat Jan 12, 2013 3:14 pm


ஸ்தல வரலாறு...

மூலவர்: – மூகாம்பிகை
தீர்த்தம்: – அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்குத் துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான்.

அவனது வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, “மூகாம்பிகை” என்ற பெயரில் தங்கினாள். அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, சக்கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரசுவதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரசுவதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளன.

முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூசை நடக்கிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரசுவதியாகப் பாவித்து வணங்கி, “கலா ரோகணம்” பாடி அருள் பெற்றார். சரசுவதி பூசையன்று சரசுவதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. மூகாம்பிகை சரசுவதி அம்சமாகத் திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

தொடர்புக்கு..... +91- 8254 - 258 245, 094481 77892

பொது தகவல்: கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும். தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.

சிறப்பம்சம்....

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum