தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவாமி நாத சுவாமி கோயில்

Go down

சுவாமி நாத சுவாமி கோயில் Empty சுவாமி நாத சுவாமி கோயில்

Post  amma Sat Jan 12, 2013 2:58 pm

மூலவர் - சுவாமி நாதர்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - கோயம்புத்தூர்
மாவட்டம் - கோயம்புத்தூர்
மாநிலம் - தமிழ்நாடு

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, “ஒம்” என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது. வெண்மை; தூய்மை; என்பதற்கேற்ப கோயில் முழுவதுமே வெண்மைதான். ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் நீங்கி, “நான்” என்பதை விட உயர்ந்தது இந்த இராஜகோபுரம் தான் என்ற உணர்வு ஏற்படுகிறது.

வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் தனது தம்பியின் கோயிலில் முழுமுதற்கடவுளாக முதல் ஆளாக அமர்ந்திருக்கிறார். அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப்பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை.

இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் காவல் காத்து வருகிறார்கள். மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி- தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால் சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார்.

அடுத்து சென்றால் தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் ஏந்தி, “எதற்கும் ஆசைப்படாதே” என நமக்கு அறிவுறுத்துவது போல் அவரே துறவியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார்.

இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பதை பார்க்க பார்க்க, நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வளங்களும் ஒரே இடத்தில் கிடைத்து விட்ட நிம்மதி ஏற்படும். இங்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum