தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுமார் கோதண்டராமர் கோவில்

Go down

அனுமார் கோதண்டராமர் கோவில் Empty அனுமார் கோதண்டராமர் கோவில்

Post  amma Sat Jan 12, 2013 1:42 pm

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். இங்கு அனுமார் புளியமரவடிவில் காட்சி தருகிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பரமகுடி நகரின் மேற்கு கடைசியில் பட்டுப்போன புளிய மரமும், விநாயகர் சிலையும் இருந்தன.

அப்போது அங்கு வசித்த அய்யாதுரை பிள்ளை இரு திருமணங்கள் செய்துக்கொண்டும் குழந்தைபேறு இல்லாமல் வேதனைப்பட்டார். அப்போது வடஇந்தியாவில் இருந்து ஒரு துறவி வந்தார். அவர் அஞ்சநேயர் சிலை ஒன்றை கொண்டு வந்தார். அத்துறவியிடம் அய்யாதுரை புத்ரதோஷம் விலக பரிகாரம் கேட்டார்.

இதே இந்த புளிய மரத்தில் சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்கிறேன். இந்த ஆஞ்சநேயருக்கு இங்கே ஒரு கோவில் கட்டு உனக்கு புத்ரதோஷம் விலகி புத்ரபாக்கியம் கூடும் என்றார். அய்யாதுரை பிள்ளை அங்கு கோவில் கட்டினார். பட்டுப்போயிருந்த புளியமரம் தழைத்தது. இங்குள்ள ஆஞ்சநேயர் உக்கிரம் அதிகமாக இருந்ததால் 1876-ல் திருப்பதி ஜீயர் ஆலோனைப்படி ராமர், சீதை, லட்சுமணன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதன்பின் அனுமனின் ஆவேசம் தணிந்தது. இங்கு ராமர் சன்னதியின் தென்புறம் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கு 12 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கைக்கூடும். 12 புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்தால் திருமணதடை விலகும்.

24 சனிக்கிழமைகளில் 24 பிரதட்சனம் செய்தால் வேலை வாய்ப்பு கிட்டும், 12 வியாழக்கிழமைகளில் ஒவ்வொரு முறையும் 108 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கூடிவரும். கடன் தொல்லை நீங்கும் வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஐந்து தலை நாகர் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் விக்ரகம் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புத்திரப்பேறு அடைவதாக நம்பிக்கை. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தியாக கொண்டாடுகிறார்கள்.

அன்று இந்த சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாக சதுர்த்தி அன்று நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புதுவஸ்திரம் கட்டி பாலபிஷேகம் செய்து வழிபடலாம். மேலும் வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum