தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகரிக்கும் உடற்பயிற்சி ஆர்வம்

Go down

அதிகரிக்கும் உடற்பயிற்சி ஆர்வம் Empty அதிகரிக்கும் உடற்பயிற்சி ஆர்வம்

Post  meenu Thu Jan 31, 2013 5:44 pm

ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவேசம் தற்போது எட்டிப்பார்க்கிறது. அதுவரை கண்டதையும் தின்று உடல் பெருத்துப் போயிருந்தால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள்.

உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, சுறு சுறுப்பு நீங்கி, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும்.

அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவையான உடற்பயிற்சியையும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு.

ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங்.
இரண்டு: கார்டியோ எக்சசைஸ்.

தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகையாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும். இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். கட்டுடல் கிடைக்கும். தசையும் பலமாகும்.

இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்கு தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum