தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!

Go down

மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்! Empty மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!

Post  amma Thu Jan 31, 2013 1:38 pm



மழைக்காலம் வந்தாலே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. அந்த நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங் என வெளியே செல்ல முடியாதவர்கள் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே அதை செய்யலாம்.

• ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உடலின் அத்தனை பகுதிக்குமான உடற்பயிற்சியும் அகும். மேலும் இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. எனவே மழைக்காலத்தில் உடல் எடை கூடி விடுமே என்று கவலைப்படாமல் ஸ்கிப்பிங் விளையாடுங்கள்.

• வெளியே சென்று ஜாங்கிங் போக முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு மாடிப்படி இருக்கிறது. தினசரி நான்கு முறை ஏறி இறங்குங்கள் கலோரிகள் எரிக்கப்படும். ஜாக்கிங் போகமுடியவில்லையே என்ற குறை தீரும்.

• மனதிற்குப் பிடித்த பாடலை போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளேயே நடனமாடுங்கள். ஏனெனில் நடனம் மிகச்சிறந்த உடற்பயிற்சியாக இருப்பதோடு உடலின் வடிவமைப்பை கட்டுக்குள் வைக்கும். மன அழுத்தம் இருந்தாலும் குணமடையும்.

• புஷ் அப்ஸ் - சிட் அப்ஸ் இவை இரண்டும் வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள். பத்து முறை உட்கார்ந்து எழுந்திரியுங்கள். உங்களின் உடலில் உற்சாகம் பிறக்கும். வயிறு, தொடைப் பகுதி குறைவதற்கான அற்புதமான உடற்பயிற்சி.

• கைகளுக்கு வலிவு தரும் பயிற்சிகளை செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பெட் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதை கைகளில் வைத்து ஏற்றி இறக்கலாம். டம்ப்பெல்ஸ் செய்வதற்கு சமமானது இந்த உடற்பயிற்சி.

- இனி மழைக்காலத்தில் வெளியே சென்று ஜாக்கிங் போக முடியலையே என்று வருந்த வேண்டாம். மேலே கூறிய எளிய உடற்பயிற்சிகளை செய்து உடலையும், மனதையும் ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளுங்களேன்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum