தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஞ்சீபுரம் இட்லி

Go down

காஞ்சீபுரம் இட்லி Empty காஞ்சீபுரம் இட்லி

Post  meenu Wed Jan 30, 2013 6:27 pm

தினமும் இட்லியா? என்று சலித்துக் கொள்பவர்களுக்கு, காஞ்சீபுரம் இட்லி தயாரித்து கொடுத்தால் நிச்சயம் ஒரு பிடி பிடிப்பார்கள். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகக் கூடிய கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவு இது. செய்முறை இதோ...

தேவையான பொருட்கள்....

புழுங்கலரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப்
கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை.....

* அரிசி, முழு உளுத்தம்பருப்பை ஒன்றாக ஊற வைத்து கொரகொரவென அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், மாவு பொங்கியதும் ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும், அத்துடன் நல்லெண்ணெயை காய்ச்சி ஊற்றவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை உடைத்து கலந்து கொள்ளவும்.

* இத்துடன் இஞ்சியை பொடியாக துருவி சேர்த்து, தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்கவும்.

* நன்றாக கலந்து அகலமான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை முக்கால் பங்கு வருமாறு ஊற்றி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைக்கவும்.

* காஞ்சீபுரம் இட்லி ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum