தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயிர் சாண்ட்விச்

Go down

தயிர் சாண்ட்விச் Empty தயிர் சாண்ட்விச்

Post  meenu Wed Jan 30, 2013 6:19 pm



தேவையான பொருட்கள்.....

கோதுமை பிரெட் ஸ்லைஸ் – 10
புளிக்காத தயிர் – ஒரு கப்
வெள்ளரிக்காய் – 1
தக்காளி – 1
புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெள்ளரிக்காய், தக்காளியை நன்கு கழுவி மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.

• பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.

• ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.

• பிறகு, அதன் மேல் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸால் மூடவும்.

• இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும்.

• கடைசியாக தயிருடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum