தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புத்துணர்ச்சி பொங்க...

Go down

புத்துணர்ச்சி பொங்க... Empty புத்துணர்ச்சி பொங்க...

Post  meenu Wed Jan 30, 2013 11:52 am

வேலை செய்ய புத்துணர்ச்சி அவசியம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை புத்துணர்ச்சி நிரம்பி வழிந்தால் வாழ்வே மாறிவிடும். அதற்கான சில டிப்ஸ்கள் இதோ!

* அதிக வேலை இருந்தாலும், எவ்வளவு அவசரம் என்றாலும் காலைச் சாப்பாட்டை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். வயிற்றுக்கு நீண்ட ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் காலை உணவு உடலுக்கு உடனடி சக்தி தரும்.

* காலை எழுந்ததும் சூரியஒளி உடலில் பட 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியலைப் போடுங்கள். இளம் வெந்நீர் உடலை உடனே புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

* உடல் உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்து நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்.

* அதிக சத்தமில்லாமல் சிறிது நேரத்திற்கு மட்டும், மியூசிக் கேட்கலாம். அவ்வப்போது சுற்றுலா, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

* மனதுக்குப் பிடித்த வேலைகளையும், உடல் ஒத்துழைக்கும் வேலைகளையும் மட்டுமே செய்யுங்கள். இதை தொடர்ந்தால் புத்துணர்ச்சி மட்டுமின்றி புன்னகையும் எப்போதும் உங்கள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum