தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Go down

ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள் Empty ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post  meenu Mon Jan 28, 2013 3:19 pm

• இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, பகலில் தூங்குவது போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல உறங்கும் போது பருத்தி நூல் ஆடைகளை அணிவது நல்லது.

• சோப்பை அடிக்கடி உடம்பில் தேய்ப்பது நல்லதல்ல. அக்குள், கழுத்துப் பின் பகுதி, முதுகு, கைகால்களில் மட்டும் சோப்பை உபயோகிக்க வேண்டும். முகத்திற்கு கடலைமாவு பூசிக் கழுவலாம்.

• நனைந்த தலைமுடியை சின்ன சீப்புகளினால் சீவக்கூடாது. அதற்குப் பெரிய சீப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

• தினசரி காலையில் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீச்சலடிப்பது, சைக்கிள் மதிப்பது போன்ற பயிற்சியையும் செய்யலாம்.

• உச்சி வெயில் நேரத்தில் சூரிய கதிர்கள் முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு மசாஜ் செய்து கொள்ளலாம்.

• விரதம் இருக்கும் நாட்களில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலுக்கு கெடுதல் உண்டாக்கும்.

• இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உடல் முழுக்க ஆவி பிடிக்கலாம். இது உடல் நலத்திற்கும், சருமத்தின் பளபளப்புக்கும் நல்லது.

• தினசரி காலையில் காபியோ, டீயோ அருந்துவதற்கு முன்னர் ஒரு பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

• மேக்-அப் செய்த பின்பு அவை தேவைப்படாத போது அதை நீக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய மேக்-அப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது. இதனால் கெடுதல் உண்டாகும்.

• கொழுப்பு நிறைந்த எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர். அது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் கெடுதல்.

• ஆறுமாதத்திற்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum