தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள்

Go down

அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள்  Empty அதிகரிக்கும் பாலியல் தொழிலாளி பற்றிய படங்கள்

Post  ishwarya Mon May 27, 2013 6:22 pm

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே பல ஹீரோயின்கள், பாலியல் தொழிலாளி வேடம் ஏற்க ஆர்வம் காட்டி வந்ததை ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். காரணம், வழக்கமாக மரத்தைச் சுற்றி டூயட் பாடும் கேரக்டராக இது இருக்காது. மேலும், அந்த வேடத்தில், நடிப்பில் பன்முக திறமைகளை வெளிப்படுத்த முடியும். அது மட்டுமின்றி, ரசிகர்களிடம் அந்த கேரக்டர் பரபரப்பாகப் பேசப்படும். நாடு தழுவிய பப்ளிசிட்டி கிடைக்கும். சில நேரங்களில், விருதுகளும் குவியும்.

ஐஸ்வர்யா ராய், ரீமா சென் போன்றோர் ஆரம்ப காலத்தில் வேற்றுமொழிகளில் பாலியல் தொழிலாளியாக நடித்த படங்கள், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. சில வருடங்களுக்கு முன் ‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா அதுபோன்ற வேடத்தில் நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். இப்போது தெலுங்கு ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார். ‘பாலியல் தொழிலாளியாக நடிக்க முகம் சுளிக்கவில்லை. அந்த கேரக்டரை விரும்பித்தான் நடித்தேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். ‘பிரேம ஒக்க மயக்கம்’ என்ற தெலுங்கு படத்தில், சார்மி கால் கேர்ள் வேடத்தில் நடித்துள்ளார். ‘அப்பாயி கிளாஸ் அம்மாயி மாஸ்’ படத்தில், ஹரிப்பிரியா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், ‘டி டே’ என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

‘பொதுவாக படங்களை உருவாக்கும்போது, அழகியல் அம்சங்கள் இருக்கிறதா? மெசேஜ் இருக்கிறதா என்று பார்ப்பதை விட, ஹீரோயினை எந்த மாதிரி காட்டுகிறார்கள் என்பதை கவனிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே, பாலியல் தொழிலாளி கேரக்டரில் ஹீரோயினை நடிக்க வைக்கும்போது, இலைமறை காயாக கவர்ச்சியை வாரியிறைக்க முடியும் என்றுகூட சில இயக்குனர்கள் கணக்கு போடுகிறார்கள். திடீரென பரபரப்பான விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காகவும் சில ஹீரோயின்கள் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புகிறார்கள்’ என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» சிறுவர்களிடையே அதிகரிக்கும் பாலியல் குற்றம்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum