தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!

Go down

மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!  Empty மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!

Post  ishwarya Mon May 27, 2013 1:50 pm

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு மூ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த பிரச்னைகள் எல்லாம் ஓய்ந்து நாளை மறுதினம்(பிப்.7ம் தேதி) திரைக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் எடுக்க இருப்பதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கமல் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பன் தயாரிக்கும் படத்தை கமல் இயக்கி, நடிக்கவும் இருக்கிறார்.

இந்நிலையில், கமல் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு "மூ" என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு பேட்டியின்போது எனது அடுத்த படத்திற்கான தலைப்பாக "மூ" என்பதை பதிவு செய்வேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே விஸ்வரூபம் படத்தின் முடிவில் முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்பி விடுவது போன்றும், இரண்டாம் பாகத்தில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் காட்சிகளை படமாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விஸ்வரூபம் படத்தை எடுத்தபோதே இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதியை கமல் முடித்துவிட்டதாகவும், இன்னும் சில காட்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமே "மூ" படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஸ்வரூபம் வெளியான கையோடு தனது அடுத்‌த படத்திற்கான அறிவிப்பை கமல் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum