தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல்ஹாசன் ஏற்பாட்டில் விஸ்வரூபத்தை பார்த்த ரஜினி.

Go down

கமல்ஹாசன் ஏற்பாட்டில் விஸ்வரூபத்தை பார்த்த ரஜினி. Empty கமல்ஹாசன் ஏற்பாட்டில் விஸ்வரூபத்தை பார்த்த ரஜினி.

Post  ishwarya Mon May 27, 2013 11:54 am

தமிழ்நாடு முழுவதும் இன்று திரையிடப்பட்டுள்ள கமலின் விஸ்வரூபம் படத்தினை நேற்று மாலை ரஜினிகாந்த் குடும்பத்துடன் தன் வீட்டில் பார்த்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கமல், ரஜினியில் போயஸ் கார்டன் வீட்டில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்ட போது ரஜினிதான் முதன் முதலில் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் மனம் உடைந்து பேட்டி அளித்த போதும் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

எனவே தான், வீட்டிலேயே ரஜினியை படம் பார்க்க வைத்தார் கமல்ஹாசன்.

நடிகர், நடிகைகள் பலர் விஸ்வரூபம் படத்தை பார்க்க ஆர்வப்பட்டதால் அவர்களுக்கு நேற்று இரவு சத்யம் திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு கமல் ஏற்பாடு செய்தார்.

வாசலிலேயே நின்று படம் பார்க்க வந்தவர்களை வரவேற்ற கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை நடிகர்கள் பிரபு, ஜெயராம், விவேக், சேரன், நடிகைகள் சுகாசினி, குஷ்பு, ராதிகா உட்பட பலரும் பார்த்தனர்.

‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரே 3டி’ ஒலி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது. இந்த ஒலி தொழில் நுட்ப வசதி சத்யம் சிக்ஸ் டிகிரி திரையரங்கில் உள்ளது. அந்த திரையரங்கில் தான் நடிகர் நடிகைகள் படத்தை பார்த்தனர்.

மேலும் டி.டி.எச்.களில் வருகிற 15ம் திகதி விஸ்வரூபம் படம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

இதற்காக டி.டி.எச். நிர்வாகத்தினருடன் கமல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum