தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயதசமியில் பூஜை நடத்துவது எப்போது?

Go down

விஜயதசமியில் பூஜை நடத்துவது எப்போது? Empty விஜயதசமியில் பூஜை நடத்துவது எப்போது?

Post  birundha Sun May 26, 2013 3:19 pm


நாளை மறுநாள் (24-ந்தேதி) புதன்கிழமை விஜயதசமி. நவராத்திரி விரதத்தின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை முடிவடைந்தபின், அதற்கு அடுத்த நாளான பத்தாம் திதி நாளே விஜயதசமி என்று முன்னால் குறிப்பிட்டோம். இதன்படி- அக்டோபர் மாதம் 24ஆம் தேதி (ஐப்பசி மாதம் 8ஆம் நாள்) புதன்கிழமை தசமி திதி என்பதால், அன்று தான் விஜயதசமியாகும்.

விஜயதசமிக்கான பூஜையைத் தொடங்கி, வழக்கமான வேலைகளையும், புதிய வேலைகளையும் ஆரம்பித்துக் கொள்ள நல்ல நேரங்கள்.

1. காலை 6.04 மணி முதல் 7.04 வரை.
2. காலை 9.05 மணி முதல் 10.04 வரை.-
3. பிற்பகல் 1.35 மணி முதல் 3.04 வரை.
4. மாலை 4.04 மணி முதல் 4.34 வரை.
5. இரவு 7.04 மணி முதல் 9.04 வரை.

முதல் நாள் சரஸ்வதி பூஜை அன்று விடுமுறை விடப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் காலை 6.04 மணி முதல் 7.04 வரையில் உள்ள நல்ல நேரத்தைப் பயன்படுத்தலாம். அலுவலகங்கள் தொழில் நிலையங்களில் காலை 9.05 மணி முதல் 10.04 வரையிலாக உள்ள நல்ல நேரத்தில் தங்கள் வழக்கமான வேலைகளைத் தொடங்கிக் கொள்ளலாம்.

புதிய வேலைகளை ஆரம்பித்துக் கொள்பவர்கள், முன்னால் குறிப்பிட்ட நல்ல நேரங்களில் தங்களுக்கு வசதியான நேரத்தைப் பயன்படுத்தலாம். முன்னதாகவே மகாஅஷ்டமி, அல்லது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையில் விரிவாக வழிபாடுகள் நடத்தப்பட்டிருப்பதால், நல்ல நேரத்தில் தீபம் ஏற்றி, தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வைத்து நிவேதனம் செய்து, தூப தீபம் காட்டிய பின் முதல்நாள் ஆயுத பூஜையின்போது படையலில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், ஆயுதங்கள், தொழில் கருவிகள் முதலானவற்றை எடுத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடலாம்.

கனமான எந்திரங்களை இருந்த இடத்திலேயே இயக்கலாம். புதிதாக முயற்சிகள், வியாபாரம், தொழில் தொடங்குபவர்கள் விஜயதசமி பூஜையை விமரிசையாகச் செய்து கொள்ள வேண்டும் என்றாலும் தங்கள் விருப்பம்போல சிறப்புடன் நடத்திக் கொள்ளலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum