தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் சூர்யா ஃபேன் - பெருமை பொங்க சொல்லும் லட்சுமி மேனன்.

Go down

நான் சூர்யா ஃபேன் - பெருமை பொங்க சொல்லும் லட்சுமி மேனன். Empty நான் சூர்யா ஃபேன் - பெருமை பொங்க சொல்லும் லட்சுமி மேனன்.

Post  ishwarya Sat May 25, 2013 2:03 pm

சசிகுமாருடன் சுந்தர பாண்டியன், விக்ரம் பிரபுவுடன் கும்கி என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட லட்சுமி மேனனுக்கு, இந்த இருவரில் பிடித்த ஹீரோ யார்?

ம்ஹூம்.. இருவருமே இல்லையாம்... இன்னும் ஜோடி போடாத சூர்யாவைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்கிறார் லட்சுமி. இப்போது கொச்சியில் முகாமிட்டுள்ள லட்சுமி மேனன், சினிமா, ஷூட்டிங், டூயட் என அனைத்தையும் மறந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.

காரணம், நாளைதான் அவருக்கு முதல் தேர்வு ஆரம்பிக்கப் போகிறதாம்.

இந்தப் படிப்பைக் கூட அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணுபவர் சூர்யாதானாம். "நான் நடிக்க வரும் முன்பே சூர்யாவின் ரசிகை. அவருடன் ஜோடியாக நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டே அந்த வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்," என்றார்.

சூர்யா அடுத்து கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார். இவர்களில் லிங்குசாமி ஏற்கெனவே தன் படத்துக்கு சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். கவுதம் மேனன் சார்.. லட்சுமியின் கோரிக்கையை மனசுல வச்சிக்குங்க!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum