தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உஸ்பாகிஸ்தானில் 'இரண்டாம் உலகம்'!

Go down

உஸ்பாகிஸ்தானில் 'இரண்டாம் உலகம்'! Empty உஸ்பாகிஸ்தானில் 'இரண்டாம் உலகம்'!

Post  ishwarya Sat May 25, 2013 1:11 pm

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் இப்படத்தினை செல்வராகவன் இயக்கி வருகிறார். முதல் முறையாக இப்படத்தில் இசைக்காக ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து இருக்கிறார்.

'இரண்டாம் உலகம்' படத்திற்காக இதுவரை படப்பிடிப்பே நடைபெறாத ஜார்ஜியா நாட்டில் படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள், மும்பையில் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது..

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், Keith Devlin என்பவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதி பாடல்களுக்காக உஸ்பாகிஸ்தான் நாட்டிற்கு விரைவில் செல்ல இருக்கிறார்கள். அப்பாடல் முடிவடைந்த உடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும். .

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இப்படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். தெலுங்கில் 'Brindavanamlo Nandakumarudu' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum