தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றோருடன் வளம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி

Go down

பெற்றோருடன் வளம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி Empty பெற்றோருடன் வளம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி

Post  ishwarya Sat May 25, 2013 1:07 pm

தமிழில் ‘பாய்ஸ்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த் மற்றும் ‘நான் ஈ’ படத்தில் நடித்தவர் சமந்தா. இவர்கள் இருவரும் நேற்று பகல் 11 மணியளவில் தங்களின் பெற்றோருடன் ஜோடியாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு கோவில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் இருவரும் ஜோடியாக அமர்ந்து ராகு-கேது பூஜை செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசம் செய்து விட்டு வெளியே வந்த நேரத்தில் நடிகர் சித்தார்த்தின் தந்தை சூரியபிரகாசுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே அங்கிருந்த அர்ச்சகர்கள் அவரை மீட்டு முதலுதவி செய்த பின்னர் சூரியபிரகாஷ்சை கோவில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக திருப்பதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தாவை புகைப்பட கலைஞர்களும், நிருபர்களும் பேட்டி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை நடிகர் சித்தார்த் கடுமையாக திட்டியுள்ளார்.

இருவரின் காதல் விடயம் பற்றியும் வெளியே பரவ தொடங்கிய இந்நிலையில் நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் பெற்றோருடன் ஜோடியாக வந்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum