தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'சிஎம்' அரசியல் கதை அல்ல!: கூறுகிறார் ஆக்சன் கிங்!

Go down

'சிஎம்' அரசியல் கதை அல்ல!: கூறுகிறார் ஆக்சன் கிங்! Empty 'சிஎம்' அரசியல் கதை அல்ல!: கூறுகிறார் ஆக்சன் கிங்!

Post  ishwarya Sat May 25, 2013 12:57 pm

ஆக்சன் கிங் அர்ஜூன் எழுத்தில், இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள படம் சிஎம்! இந்த படம், தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளதாம். அர்ஜூன் நாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடி யார் என்பது இன்னமும் சஸ்பென்சாகவே உள்ளது.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான கன்னட படத்துக்கு இவருக்கு, கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள அர்ஜுன், "விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை கிடைத்ததும் மகிழ்ந்தேன், விருது பெற்ற கன்னட படத்தின் பெயர் பிரசாத்.

சினிமா ஒரு பவர் புல் மீடியா. இதன் மூலம் நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அப்படி, நல்ல படத்தை இயக்க எண்ணி நான் எழுதி இருக்கும் படம்தான் சிஎம். பலரும் படத்தின் தலைப்பு சிஎம் என்றவுடன் முதல்வன் போல புரட்சிகரமான அரசியல் படமா என்று கேட்கிறார்கள்.

நிச்சயமாக சிஎம் ஒரு அரசியல் படம் அல்ல, காமன் மேன் என்பதைத்தான் சுருக்கி சிஎம் என்று வைத்துள்ளேன் ஆனால், நான் நினைப்பது போல சமூகப் பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்ல நினைத்துள்ளேன்." என்று கூறியுள்ளார் அர்ஜுன்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum