தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார்.

Go down

போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார். Empty போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார்.

Post  ishwarya Sat May 25, 2013 12:20 pm

பர்மிஷன் இல்லாமல் போட்டோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட 2 புகைப்படக¢காரர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார் திவ்யா.தயாரிப்பாளருடன் பிரச்னை, பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களுடன் மோதல், இணையதளத்தில் ரசிகர் குறும்பால் புகார் என அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் திவ்யா. கன்னடத்தில் தயாராகும் ‘நீர் டோஸ்’ என்ற படத்தில் இவர் நடிக்கிறாரா, இல்லையா என்பதே சர்ச்சையாக பேசப்பட்டது. பின்னர் பிரச்னை தீர்க்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.

மது பாரில் நடனம் ஆடும் பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறார் திவ்யா. சமீபத்தில் இதன் ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. உடன் காமெடி நடிகர் ஜெகதீஷ் நடித்துக்கொண்டிருந்தார். திடீரென்று தேனீக்கள் தாக்குதல் நடந்ததையடுத்து ஷூட்டிங் ரத்தானது. இதற்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர்களை அழைத்திருந்தார் இயக்குனர். புகைப்படக்காரர்களும் வந்திருந்தனர். பேட்டி நடந்துகொண்டிருந்தபோது புகைப்படக்காரர்கள் திவ்யாவை படம் எடுத்தார்கள். அதற்கு அவர் மறுப்பு சொன்னார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெகதீஷ் சமாதானம் செய்துவைத்தார்.

இந்நிலையில் பெங்களூர் அசோக்நகர் போலீசில் திவ்யா ஒரு புகார் அளித்தார். அதில்,‘ஷூட்டிங் தளத்தில் எனது அனுமதி இல்லாமல் இரண்டு புகைப்படக்காரர்கள் என்னை போட்டோ எடுத்தார்கள். குறிப்பிட்ட தோற்றத்தில் எனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதை மீறி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது என் மனதை பாதிப்பதாக உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படத்தை இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’
»  மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum