தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார்! ஆவி பறக்கும் அடுத்த செய்தி...!

Go down

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார்! ஆவி பறக்கும் அடுத்த செய்தி...! Empty கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார்! ஆவி பறக்கும் அடுத்த செய்தி...!

Post  ishwarya Sat May 25, 2013 12:16 pm

மாற்றான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வந்தபோது அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. ஏற்கனவே அயன், கோ என்ற இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்திருந்ததால், இந்த படம் மெகா ஹிட்டாக அமைந்து விடும் என்று எதிர்பார்த்த முன்னணி பட நிறுவனங்கள் அடுத்த படத்தை தங்களுக்கு இயக்க அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க போட்டி போட்டன. அந்த போட்டியில் முந்தியது ஏஜிஎஸ் நிறுவனம்.

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்ட இந்நிறுவனம், அப்படத்தை இயக்க கே.வி.ஆனந்திடமும் பேசியிருந்தது. ஆனால் மாற்றான் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் ஆடிப்போனார்கள். அதனால், ரஜினி படம் இப்ப வேண்டாம். அப்புறம் பார்க்கலாம் என்றும் ஆனந்தை அமைதிப்படுத்தி வைத்தனர். என்றாலும், இதற்கான முயற்சிகளில் இறங்கிய ஆனந்துக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே கிடைத்ததால், அவராகவே பின்னர் அமைதியாகி விட்டார்.

இந்த நிலையில், ஏற்கனவே கே.வி.ஆனந்துக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம், இப்போது ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்களாம். ஹீரோ மாறி விட்டபோதும் கவலைப்படவில்லை ஆனந்த், எப்படியோ ஒரு பிரபல நடிகர் கிடைத்தால் போதும் என்று ஆக்ஷன் சொல்ல ஆயத்தமாகி வருகிறாராம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum