தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாலாஜா தன்வந்திரி கோவில்

Go down

வாலாஜா தன்வந்திரி கோவில்  Empty வாலாஜா தன்வந்திரி கோவில்

Post  ishwarya Wed May 22, 2013 6:02 pm

தன்வந்திரி பகவானுக்கு என்று தனிக்கோவில் வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இங்கு தன் வந்திரி பகவானுடன் வாழ்வியல் முறைகளை விளக்கும் விதமாக மூலிகை ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேத ஆகமங்கள் ஆராய்ச்சி, அறிவியல், சமூகம், கலை, பண்பாடு, சமயம், பாரம்பரிய சம்பிரதாயங்களை பலரும் அறிந்து கொள்ளும் விதத்திலும் தெரிந்து பயன்பெறும் விதத்திலும், வாழ்வியல் முறையில் பல உண்மைகளை தெரிந்து கொள்ளும் விதத்திலும் அமையப்பெற்றுள்ளது.

இக்கோவில் உலக வாழ்வியல் மையம் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ. 14001, ஐ.எஸ்.ஓ. 9001-2008 ஆகிய உலக தரச்சான்றிதழ் பெற்ற பெருமையும் இந்த பீடத்திற்கு உண்டு.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர் தன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தன்வந்திரி பீடத்தை உருவாக்கினார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார்.

தன்வந்திரி பீடம்............... இந்த அமைப்பின் அங்கமே ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஆகும். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் தன்வந்திரி பகவானை கரிக்கோல ஊர்வலமாக இந்தியா முழுவதும் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்களிலும் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெறும் வகையில் வைத்து 147 ஹோமங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 67 வைணவ கோவில்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.

கும்பாபிஷேகம்.......... ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 15.12.2004-ம் தேதி தன்வந்திரி பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன் காக்கும் தன்வந்திரி பகவான் அமிர்தகலசம், கையில் சீந்தல் கொடியுடன் ஸ்டெதாஸ்கோப் அணிந்து 6 அடியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நான் என்னும் அகந்தையை விட்டுவிட்டு என்னிடம் நேரிடையாக வந்து சரணடையும் பக்தர்களை கைவிடமாட்டேன். அவர்கள் வாழ்வில் நல்ல உடல்நலமும், மனநலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பேன் என்று கூறி தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கிவருகிறார் தன் வந்திரி பகவான்.

பீடத்திற்கு வரும் ஆண் பக்தர்கள் சட்டை, பனியன் அணியாமல் செல்ல வேண்டும். ஏனென்றால் தன்வந்திரி பகவானின் நேரடி கடைக்கண் பார்வைபட வேண்டும் என்றும் ஹோமங்களின் பயன்களை பெறும் விதத்திலும் அங்கு அமைந்துள்ள சிலைகளின் கீழ் பக்தர்களால் எழுதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மந்திரங்களின் ஒலி கதிர்களை பெறும் வகையிலும் மூலிகைகளின் காற்றுபட்டு உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதற்காக சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது பீடத்தின் கட்டுப்பாடு. கட்டுப்பாடான வாழ்க்கை ஒருவரை வாழ்வில் உயர்த்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அணையா ஹோமகுண்டம்............. இந்த பீடத்தில் தனிநபர் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை என்று எதுவும் இல்லை. மூலவரான தன்வந்திரி பகவான் முன்பு அமைதியாக உட்கார்ந்து அவரிடம் நம் குறைகளை ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். பின்னர் அவரின் திவ்ய பேரழகை கண் குளிர கண்டு மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யலாம்.

அவ்வாறு செய்யும் போது நம்முடைய மனபாரம் குறைகிறது. மனம் லேசாகிறது. உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது என்பதை வருகை புரியும் பக்தர்கள் அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துள்ளது சான்றாக உள்ளது. இங்கு உலக நலன் கருதி நித்ய ஆராதனை நடக்கிறது. 365 நாட்களும் 356 யாகம் நடக்கிறது.

தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. பக்தர்களுக்கு பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உலகிலேயே எங்கும் பார்க்க முடியாத அணையா ஹோம குண்டம் இங்கு உள்ளது.

அங்கு எப்போதும் அக்னி பகவான் வாசம் செய்து கொண்டிருப்பார், பக்தர்களும் தங்களால் இயன்ற யாகப் பொருட்களை இந்த ஹோம குண்டத்தில்போடலாம். இந்த பீடத்தில் பிரதானமாக செய்வது மந்திரங்களுடன் கூடிய ஹோமங்கள் தான்.

விசேஷ ஹோமங்கள்............... ஆரோக்கிய பீடம் என்பது பெயரளவில் இருக்க கூடாது என்பதால் உடல் நலம், மனநலம் அளிக்கும் ஹோமங்கள் தினந்தோறும் நடத்தப்படுகிறது. குழந்தைவரம் இல்லையா, திருமண தடையா, கடன் பிரச்சினையா, அனைத்திற்கும் இங்கு ஹோமங்கள் நடைபெறுகிறது. இவை மட்டுமல்லாது.

அச்வாரூடா, வாஞ்ச கல்பதா கணபதி, ஸ்ரீசூலினி துர்கா, 1008 திருஷ்டி துர்காஹோமம், சர்பசாந்தி ஹோமம், நவசண்டி ஹோமம், மஹாருத்ர ஹோமம், ஸ்ரீவித்யா நிவாரண பூஜை என விசேஷ ஹோமங்களும் நடக்கிறது.

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் வினை தீர்க்கும் விநாயகர், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவான் காட்சி அளிக்கின்றனர். இவர்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே எண்ணை அபிஷேகம் செய்கின்றனர்.

ஆரோக்கிய லட்சுமி.............. மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கியலட்சுமி இங்கு தாயாராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆரோக்கியலட்சுமி ஸ்டெதாஸ்கோப்பும், கைகெடிகாரமும் அணிந்து கைகளில் அமிர்தகலசம், சீந்தல்கொடி, அட் டைப்பூச்சி சகிதம் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்கிய லட்சுமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு பஞ்ச திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மகிஷாசுரமர்த்தினி 18 திருக்கரங்களுடன் மகிஷனை வதம் செய்து முடித்த திருக்கோலத்தில் மலர்ந்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

அம்மன் சன்னதியில் அமாவாசை நாட்களில் நெய், மிளகாய் போன்ற திரவியங்களுடன் சூலினியாகம் மற்றும் மரணபயம் போக்கும் ம்ருத்யுஞ்ச யாகமும் நடக்கிறது. மாங்கல்ய பலம் பெறுவதற்காகவும், திருமண தடைகள் நீங்கவும், சவுபாக்கியங்கள் பெறவும் பெண்களுக்கு இந்த சன்னதியில் மாங்கல்ய சரடும், எலுமிச்சை பழமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மகிஷாசுரமர்த்தினி சிலைக்கு 1008 சுமங்கலிகள் அபிஷேகம் செய்து 10 கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினி விக்கிரகம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணமாக வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

468 சிவலிங்கங்கள்............ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 468 சித்தர்களின் நினைவாக 468 சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 300 ஜீவசமாதிகளுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் சென்று அங்கிருந்து எடுத்து வந்த மண்வைத்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இங்கு பிரதோஷம், பவுர்ணமி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. தினந்தோறும் வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சிவலிங்கங்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து பலனடைகின்றனர். பீடத்தில் சிறப்பம்சமாக காலச்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தில் நட்சத்திரங்கள், ராசிகளுக்குரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பற்சக்கர வடிவில் கால சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தை சுற்றி வரும் பொழுது காலச்சக்கரத்தில் வளர்ந்துள்ள மருத்துவ குணமுள்ள விருட்சங்களின் காற்று நமக்கு நோய் நிவாரணத்தை ஏற்படுத்துகிறது. காலச்சக்கரத்தில் உள்ள மூலிகைகள் யாகத்தில் சேர்க்கப்பட்டு பஸ்பமாக பக்தர்களுக்கு விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சன்னதிகள்............. பீடத்தில் அய்யப்பன், மகாவீரர், ராமர், சீதை, லட்சுமணன், அன்னபூரணேஸ்வரி, கூர்மலட்சுமி நரசிம்மர், பாலரங்கநாதர், காயத்திரிதேவி, தத்தாத்ரேயர், ஹயக்கிரீவர், மேதா தட்சிணாமூர்த்தி, நவகன்னியர்கள் கிருஷ்ணர், கருடாழ்வார், ராகவேந்திரர், தங்கபாபா, சூட்சமபாபா, வள்ளலார், சங்கராச்சாரியார், ரமண மகரிஷி, வேதாந்த தேசிகர், சுவாமி குழந்தையானந்தா, கிரியாயோகி மகா அவதார பாபாஜி, சுதர்சன ஆழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மஹாமேரு, ஸ்ரீபாதபீடம் அத்ரிபாதம், துளசி மாடம் ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்வந்தரி பகவானை தரிசித்து நல்ல உடல் நலமும், நல்ல மன நலமும் பெறுவோம்.

அமைவிடம்............. தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நடை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி திறந்திருக்கும். வாலாஜா பஸ் நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் வேலூரில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் இந்த பீடம் அமைந்துள்ளது. வேலூர்-சென்னை மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா நகரம் உள்ளது.

கார்த்தவீர்யார்ஜூனர்............. மகரிஷி ஜமதக்கனியின் புதல்வரும், குரு தத்தாத்ரேயரின் பிரதம சீடருமான கார்த்தவீர்யார்ஜூனருக்கு தனி சன்னதி உள்ளது. இவருக்கு ஆயிரம் கையுடையான் என்ற பெயரும் உண்டு, இவரை முழுமையாக நம்பி நம்முடைய குறைகளை கூறினால் வியாபார நஷ்டத்திலிருந்து நம்மை காப்பார் என்பதும், திருட்டு போன பொருட்களை திரும்ப கிடைக்க செய்வார் என்பதும் ஐதீகம்.

கார்த்தவீர்யார்ஜூனர் மகாவிஷ்μவின் அம்சமாகவும், தலைசிறந்த அரசராகவும், நம்பிக்கைக்குரிய காவல் தெய்வமாகவும், ஆயுதங்களைக் காவலுக்குரிய கொண்டு பச்சைக்கல்லில் பரவசமடையச் செய்கிறார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum