தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருக்கள் வராமல் பராமரிப்பது எப்படி

Go down

மருக்கள் வராமல் பராமரிப்பது எப்படி Empty மருக்கள் வராமல் பராமரிப்பது எப்படி

Post  ishwarya Tue May 21, 2013 1:06 pm

மனிதர்களின் தோலில் எற்படும் மருக்கள், பபில்லோமா வைரசால் ஏற்படுகிறது. பொதுவாக மருக்கள் கைகளில் வரக்கூடியவை. கடின வகை உள்ளிட்ட பல்வேறு வகையான மருக்களும் உள்ளன. மருக்கள் வந்த இடத்தில் தோல் சற்று தடிமனாகவும், கடினமாதாகவும் காணப்படும். மருக்கள் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வரலாம். உடலில் தொடர் மருக்கள் சில நேரங்களில் ஏற்படும். அவைகளை உரிய சிகிச்சையின்றி அகற்றுதல் அரிது.

பொதுவாக குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மருக்கள் உடலில் பரவும். மருக்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை உள்ளன. இவைகள் மரபு சார்ந்த வைரஸ்களாகும். இதில் குறிப்பிடத்தக்க வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தோற்றத்திலும், அளவிலும் மனித உடலில் காணப்படும்.

ஒருசில வரைஸ்கள் கழுத்து பகுதியில் புற்றுநோயை உண்டாக்க கூடியது. இதில் குறிப்பிடத்தக்க வகையை 16 மற்றும் 18 வைரஸ்களை சொல்லலாம். இந்த மருக்கள் ஒரு மனித தோலில் இருந்து மற்றொரு தோலுக்கு எளிதில் பரவக்கூடியது. குறிப்பாக ஈரப்பாதமான சூழலில் வசிப்பவர்களுக்கு இந்த வைரஸ்கள் மருக்களை எளிதில் பரப்பி விடும். இவைகள் பல நேரங்களில் தீர்க்கப்பட முடியாமலும், வினோதமாகவும் காணப்படும்.

அனோஜெனிட்டல் வகையை சார்ந்த மருக்களை கூறலாம். இது பாலியல் தொடர்பு உடையவர்களை அதிகமாக தாக்கக் கூடியவை. ஏனெனில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மூலமாக அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தோல் மூலம் எளிதில் பரவக்கூடியது. இது, அவர்களின் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகை மருக்களை பல வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

மருக்களின் வகைகள்:
பொதுவகையான மருவிற்கு வெருக்கா வல்கேரிஸ் என்று மருத்துவ பெயர் உண்டு. இவைகள் தடிமனாக காணப்படும். ரத்ததட்டுக்களை அடைப்பதன் மூலம் மெல்லிய தோலில் தன்னுடைய பங்களிப்பை எளிதில் பதிவு செய்து விடும். இந்த மருக்கள் பொதுவாக கைகள், முட்டி மற்றும் கால் மூட்டுகளில் காணப்படும்.

தட்டைவகை மருக்கள்:
பார்ப்பதற்கு மென்மையாகவும் உடலின் மென்மையான பகுதிகளிலும் காணப்படும். இவைகள் பெரும்பாலும் பிரவுன் அல்லது தோலின் நிறத்தில் காட்சியளிக்கும். இந்தவகை மருக்கள் பெண்களின் முகத்தில் பெரும்பாலும் காணப்படும். அவைகளை எளிதாக அகற்ற முடியும்.

படர்வகை மருக்கள் :
இந்த மருக்கள் பாதத்தின் அடிப்பகுதியில் கடினமான தோற்றத்தில் காணப் படும். ரத்த தட்டுக்களில் ஏற்படும் பாதிப்பினால் கரும்புள்ளிகளாக இந்த மருக்கள் தோற்றம் அளிக்கும். பல நேரங்களில் அசெளகரியமான உணர்வினை இந்த மருக்கள் ஏற்படுத்தும். எதிர்பாராத விதமாக உடலில் சில பகுதிகளில் பெரிய அளவில் படரக்கூடியவை. இந்த மருக்கள் மிகவிரைவில் மற்றொரு மருவை ஏற்படுத்துவதன் மூலம் உடலில் படர் மருவாக காட்சியளிக்கும்.

பிறப்புறுப்பில் காணப்படும் மருக்கள் :
ஏற்கனவே மேலே சொன்னதுபடி பாலியல் தொழிலாளிகளுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வகை வைரஸ்களால் அவர்களின் பிறப்புறுப்புகளில் இந்தவகை மருக்கள் தோன்றும். இவை பெரும்பாலும் தோலின் நிறத்திலேயே சிறிய அளவிலேயே காணப்படும். சில நேரங்களில் தோலின் தடித்த பகுதியாக மாறிவிடும். இதற்கு காரணம் எச்பிவி 16 மற்றும் 18 வகை வைரஸ்களே.

இந்த வகை மருக்களுக்கு பவோனைடு பெப்லாசிஸ் என்று பெயர். இந்த வகை மருக்களால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கழுத்து பகுதியிலும் புற்றுநோயை உண்டாக்க கூடியவை. இந்த வகை மருக்களை தலைசிறந்த மருத்துவர்களால் மட்டுமே குணப்படுத்த முடியும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum