தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.

Go down

தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.  Empty தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.

Post  ishwarya Tue May 21, 2013 12:55 pm

சம்பாதிக்க வேண்டும்’ என்கிற மன அழுத்தம் முதலில் நசுக்கித் தள்ளுவதென்னவோ நம் தூக்கத்தைத்தான். ‘‘தூக்கம் என்னங்க தூக்கம்... ஒரு தூக்க மாத்திரை போட்டா தன்னால வரப்போகுது’’ என்கிற வகையறாவா நீங்கள்? உங்களுக்கான மேட்டர்தான் இது... ‘‘தூக்க மாத்திரைகளே கேன்சருக்குக் காரணமாகி நிரந்தரத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிடலாம்’’ என அதிர வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு!

‘‘ஸ்லீப் டிஸார்டர்... அதாவது ‘தூக்கமின்மை நோய்’ங்கறது பெரிய சப்ஜெக்ட். இந்த பிரச்னைக்கு தீர்வு தர பிரிட்டன், அமெரிக்கா மாதிரி நாடுகள்ல ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்காங்க. ஆனா, இங்க அதை ஒரு நோயாவே பார்க்கறதில்ல. ஏதோ தலைவலி, காய்ச்சல் மாதிரி பொத்தாம்பொதுவா டாக்டர்கிட்ட மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கிட்டுப் போயிடறாங்க. அதுதான் ஆபத்தாகுது!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கிருத்திகா.

‘‘நிம்மதியாகத் தூங்குவதற்காக போடற மாத்திரைகள் முதல்ல வாய் உலர்தல், தலை சுற்றல், வயிற்றுப்போக்குன்னு சின்னச்சின்ன பக்க விளைவுகளைத் தரலாம். ரெண்டு நாள்ல இதெல்லாம் சரியாயிடும். ஆனா, மாத்திரைகளையும் அந்த ரெண்டு நாளோட நிறுத்திக்கணும். அப்படியில்லாம மாசக்கணக்குல மாத்திரை எடுத்தோம்னா, நாளாக ஆக ரத்த அழுத்தம் குறைஞ்சு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரைக்கும் ஏற்படலாம்.

இன்னொரு சீரியஸான பாதிப்பு, நாம அந்த மாத்திரைகளுக்கு அடிமையாகிடறது. ஒரு மாத்திரையில ஆரம்பிச்சு, அப்புறம் ரெண்டு, நாலுன்னு அதிகமாகி மாசக்கணக்குல டாக்டர் அட்வைஸ் இல்லாமலேயே நினைச்ச நேரத்துல போட வைக்கும். அது பெரிய ஆபத்து. ‘கேன்சர் எச்சரிக்கை’ இப்படி தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்கவங்களுக்குத்தான். தூக்க மாத்திரைகள் போடற சிலர்கிட்ட நடந்த ஆய்வுல முதல்கட்டமா இப்படிச் சொல்லி யிருந்தாலும், இதை உறுதிப்படுத்த இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம். ஆனா, இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு இந்த எச்சரிக்கை நல்ல பலனைத் தரும். ஏன்னா, முன்னாடியெல்லாம் வயசானவங்கதான் தூக்கம் வராம தவிச்சு, மாத்திரை வேணும்னு கேட்பாங்க. இப்ப முப்பது வயசுப் பொண்ணுங்களே ‘தூக்கம் வரல’ன்னு எங்ககிட்ட வர்றாங்க!’’ என்று அதிர்ச்சியைக் கூட்டினார் கிருத்திகா.

‘தூக்கம் வரவில்லை என்கிற சாதாரண பிரச்னை கேன்சரில் கொண்டு போய் விடுமா?’ - நித்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்லீப் சயின்ஸ் நிறுவனர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.
‘‘மருந்து, மாத்திரைகள் எல்லாத்துலயுமே சின்ன அளவுல பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். இருமலுக்குக் குடிக்கிற சிரப்லயே தூக்கம் வர வைக்கிற மருந்து இருக்கத்தானே செய்யுது? தூக்க மாத்திரைகளைப் பொறுத்த வரைக்கும் டாக்டர்களோட பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம யாரும் வாங்கிட முடியாது. மெடிக்கல்ல நிச்சயமா டாக்டர் ரசீது இல்லாம குடுக்க மாட்டாங்க.

ஒரே நேரத்துல அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கறப்ப அது உடல்ல பாதிப்பை உண்டாக்குது. அதுகூட உயிரைப் பறிக்கற அளவு போகாதுங்கிறதுதான் என்னோட கருத்து. தூக்க மாத்திரைகளால கேன்சர்ங்கிற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படலை. அதனால யாரும் பீதியடையத் தேவையில்லை. அதே நேரம் மாத்திரைகள் எடுத்துக்கறப்ப பக்க விளைவுகளுக்குப் பயப்படறவங்க, உடம்புக்கு தேவையான தூக்கம் கிடைக்காதப்ப ஏற்படற விளைவுகளையும் பார்க்கணும். சரியான தூக்கம் இல்லாட்டி, மன அழுத்தத்தோட, கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம்’’ என்றவர், ‘‘மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும் தூக்கமின்மை பிரச்னையில இருந்து விடுபட முடியும்’’ என்கிற ஆறுதல் தகவலும் தருகிறார்.

பொதுவாக மனிதனை சிறிய அளவிலான மயக்க நிலைக்குக் கொண்டு போவதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில் இருக்கும். நரம்பு மண்டலத்தில் லேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள்... கேன்சருக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று நம்புவோம்!


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தூக்க மாத்திரை களினால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா..?
» லிப்ஸ்டிக்’ பூசினால் இருதய நோய் அபாயம்: ஆய்வில் தகவல்
» ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும்.- ஆய்வில் தகவல்
» பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்
» பகலில் தூங்கினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum