தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு

Go down

 இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு Empty இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு

Post  ishwarya Fri May 10, 2013 6:08 pm

தேவையானவை:

சீரகம் – ஒரு தே.க
வர மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
கடுகு – தாளிக்க தேவையான

பூண்டு – 5பல்
வேர்க்கடலை – சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலைப் பருப்பு – சிறிதளவு
மல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 1/2 தே.க
உப்பு – தேவைக் கேற்ப

செய்முறை:

முதலில் வெங்காயத்தையும், மல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டையும் கொஞ்சம் பெரிதாக நறுக்கிக் வைக்கவும். சீரகம், வரமிளகாய் இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலை போட்டு வறுக்கவும், நன்கு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து தாளிக்கவும். நன்றாக வதங்கிய பின் அரைத்த பொடியையும் சிறிதளவு மல்லித்தழையையும் போட்டு அதனுடன் தேவையான உப்பும் சேர்த்து தாளிக்கவும்.

அனைத்தையும் நன்கு கலந்து மிதமான சூட்டில் வதக்கவும். பின்னர் சூடான சாதத்தை அதனுடன் கலந்து நன்றாக பிரட்டி எடுத்து, மிதமுள்ள மல்லித் தழையையும் தூவி விடவும். அவ்வளவுதான், உடலுக்கு ஆரோக்கியமான குளிர்ச்சியான சீரக சாதம் ரெடி. கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளலாம், அத்துடன் நல்லெண்ணையில் செய்தால் சுவையாகவும் இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum