தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்பதி... நிம்மதி...

Go down

தம்பதி... நிம்மதி... Empty தம்பதி... நிம்மதி...

Post  meenu Thu Jan 24, 2013 12:37 pm

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு தூக்கத்தை தொலைக்கிறார்கள்.

ஆனால் கணவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள் முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது ஆய்வு. இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது.

மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம். 35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum