தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உண்ணக்காய் செய்வது எப்படி ?

Go down

உண்ணக்காய் செய்வது எப்படி ? Empty உண்ணக்காய் செய்வது எப்படி ?

Post  ishwarya Wed May 08, 2013 12:20 pm

இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா மாநில இனிப்பு வகை. இனிப்பு பதார்த்தம் கேரளாவில் மிக பிரபலமானநேந்திர வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் உண்ணக்காய் தான்.

சரி.. சரி இனி உண்ணக்காய் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

நடுத்தரமாக பழுத்த நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.

செய்முறை:-

நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

இதன் நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

ருசியான உண்ணக்காய் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum