தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்

Go down

 மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்  Empty மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்

Post  ishwarya Sat May 04, 2013 4:49 pm

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவர் ராயல் ஸ்டார் மதுபான விளம்பரம் படம் ஒன்றில் நடித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம் ஒளிபரப்பாகிறது.

இந்த விளம்பரத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் சதீஷ்குமார் மகேஷ்பாபு மீது நல்கொண்டா மாவட்டம் ஒடிகூடன் போலீசில் புகார் செய்து உள்ளார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் மகேஷ்பாபு மதுபான விளம்பர படம் ஒன்றில் நடித்து உள்ளார். அது இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கிறது. மகேஷ்பாபு இளைஞர்களால் ஆராதிக்கும் நபராக உள்ளார். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். மதுபானத்துக்கு ஆதரவாக அவர் நடிப்பதால் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே அந்த விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனுவை போலீசார் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிட்சுபதி கூறும்போது, உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum