தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்

Go down

நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர் Empty நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்

Post  ishwarya Sat May 04, 2013 2:51 pm


தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி சில நாட்களுக்கு முன் ஐதராபாத் ஓட்டலில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் மாயமானார். எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அஞ்சலி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் அஞ்சலி 4 நாட்களுக்கு பின் ஐதராபாத் போலீசில் ஆஜர் ஆகி தன்னை யாரும் கடத்தவில்லை. மன உளைச்சலால் ஓய்வு எடுத்தேன் என்று விளக்கம் அளித்தார்.

முன்னதாக நடிகை அஞ்சலி மாயமானதும் சென்னை பத்திரிகையாளர்களுக்கு டெலிபோனில் பேட்டி அளித்தார். அதில் தன்னை சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்து இருந்தார்.

அஞ்சலியின் புகாரை மறுத்த டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். மேலும் அஞ்சலி மீது சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

மனுவில் அவர், நடிகை அஞ்சலி தனது குடும்ப பிரச்சினையில் தேவையில்லாமல் என்னை இழுத்து எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பி உள்ளார். எனவே அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவருடன் வக்கீல் ஜெயப்பிரகாசும் வந்திருந்தார்

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ் திரேட்டு வருகிற மே 6-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
»  செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum