தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு

Go down

 சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு  Empty சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு

Post  ishwarya Fri May 03, 2013 1:16 pm

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை கைதியான, இந்தியர் சரப்ஜித் சிங் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதேபோல் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சரப்ஜித் சிங் கொலையைக் கண்டித்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் திரண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

பின்னர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் உருவ பொம்மைகளை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தலைநகர் பாட்னாவிலும் போராட்டம் வெடித்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கண்டித்தும், பாகிஸ்தானைக் கண்டித்தும் பா.ஜனதா தலைவர்கள் தெருவில் இறங்கி போராடினர். சரப்ஜித் சிங்கிற்கு இந்தியா உதவி செய்யாததால், அவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
»  லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்
»  தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum