தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது

Go down

 தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது  Empty தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது

Post  ishwarya Fri May 03, 2013 1:14 pm


லாகூர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்ப்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், கடந்த சில தினங்களுக்கு முன், சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டால். தலையில் பலத்த காயம் அடைந்து, கோமா நிலைக்குச் சென்ற சரப்ஜித் சிங், நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார்.

சரப்ஜித் சிங் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்ற பாகிஸ்தான் அரசு இன்று பிற்பகல் சரப்ஜித் உடலை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதையடுத்து சரப்ஜித் சிங் உடலை ஏற்றி இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.

ஆனால், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க தாமதம் ஆனதால், சரப்ஜித் சிங் உடலை சிறப்பு விமானத்தில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அந்த அடிப்படை நடைமுறைகள் முடிந்து, சரப்ஜித் உடலுடன் விமானம் புறப்பட்டு, இரவு 7.53-க்கு அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அவரது உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டிருந்தனர்.

அரசு சார்பில் மத்திய மந்திரிகள் மணீஷ் திவாரி, பிரனீத் கவுர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அங்கிருந்து சரப்ஜித் உடல் ஹெலிகாப்டர் மூலம் அவரது சொந்த ஊரான பிக்கிவிண்ட் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். நாளை அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
»  லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
»  சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum