தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குஜராத்: பா.ஜ.க. விழாவில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த வைர வியாபாரி

Go down

 குஜராத்: பா.ஜ.க. விழாவில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த வைர வியாபாரி  Empty குஜராத்: பா.ஜ.க. விழாவில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த வைர வியாபாரி

Post  ishwarya Thu May 02, 2013 5:47 pm

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட ஜுனகார் மாவட்டத்தில் உள்ள கோசாலைக்கு(பசு மாடுகள் பராமரிக்கப்படும் இடம்) நிதி திரட்டுவதற்காக தலாலா கிராமத்தில் டெய்ரா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் தண்ணீர் பஞ்சத்தை போக்கவும் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க., மற்றும் சூரத், ராஜ்கோட், அகமதாபாத் பகுதியில் தொழில் செய்யும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில தலைமை செயலாளர் ஆர்.சி.பல்டு, உள்துறை மந்திரி ராஜ்பாய் பட்டேல், சுற்றுச்சூழல் துறை மந்திரி கோவிந்த் பட்டேல் உள்பட முக்கிய பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நடைபெற்ற குத்தாட்டத்தை கண்டு பரவசப்பட்ட பிரபல வைர வியாபாரி ஒருவர், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பார்வையாளர்களை நோக்கி வீசினார். பணத்தை பிடிக்கவும், கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை எடுக்கவும் மக்கள் முந்தியடித்ததால், அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்திற்குள் நுழைந்து கையில் கிடைத்த வரை அள்ளிய சிலர், ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum