தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு

Go down

சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு Empty சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு

Post  ishwarya Thu May 02, 2013 2:45 pm

பாகிஸ்தானில் ஜெயிலில் தாக்கப்பட்டு 6 நாட்களாக உயிருக்கு போராடிய சரப்ஜித்சிங் நள்ளிரவு 12.45 மணிக்கு மரணம் அடைந்தார். நேற்று முன்தினம் அவரை மனைவி சுக்பிரீத் கவுர், சகோதரி தல்பீர்சிங், மகள்கள் பூனம், ஸ்வப்னதீப் கவுர் ஆகியோர் பார்த்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்கள்.

இன்று காலை மரணச் செய்தி கேட்டதும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே உடனே டெல்லியில் தங்கியிருக்கும் சரப்ஜித்சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடலை இந்தியா கொண்டு வந்த குடும்பத்தினர் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

சரப்ஜித்சிங் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை மூலம் செய்து வருகிறோம். இந்த விஷயத்தில் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். அவரது உடலை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் எதுவும் செய்யமுடியாது.

உடல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் விரும்பியபடி இறுதி சடங்குகளும், இறுதி மரியாதைகளும் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தபோது அவரிடம் சரப்ஜித்சிங் குற்றமற்றவர். குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய மந்திரி ஷிண்டே தெரிவித்து இருந்தார். சரப்ஜித்சிங்கின் குடும்பத்தினரும் ரகுமான் மாலிக்கை டெல்லியில் நேரில் சந்தித்து இதை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை நாளை சந்திக்கின்றனர் சரப்ஜித்சிங் உறவினர்கள்
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
»  சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» நிலக்கரி ஊழல் விவகாரம்: சட்ட மந்திரி அஸ்வனி குமாருடன் பிரதமர் சந்திப்பு
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum