தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.

Go down

கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.  Empty கருணவின் படுகொலைகளுக்கான நினைவுச் சின்னத்தை திறந்த வைத்தார் மஹிந்தர்.

Post  ishwarya Thu May 02, 2013 11:51 am

புலிகள் வடகிழக்கில் மேற்கொண்டிருந்த படுகொலைகளில் உலகின் கண்ணை திறக்கவைத்ததும், தமிழ் மக்களை சிங்களவர்கள் எதிரிகளாக பார்க்க வைத்ததுமான படுகொலையாக கருணா கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்தபோது அரந்தலாவையில் சங்கைக்குரிய ஹேகொட இந்தசார தேரர் உள்ளிட்ட பிக்குகுள் 31 பேரும் 3 பொது மக்களும் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டமை பேசப்படுகின்றது. குறித்த படுகொலையை சித்தரிக்கும் வண்ணம் பிரபல சிப்பி ஓருவரால் நினைவுச்சின்னம் ஒன்று அமைகப்பட்டுள்ளது. இச்சின்னத்தினை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

இக்கொலையை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அரந்தலாவ நினைவு தூபியை ஜனாதிபதி நேற்று அங்குரார்ர்பணம் செய்து வைத்தார். 1987 ஜூன் 2 ஆம் திகதி அரந்தலா நுவரகலதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற இக்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் என்றுமே மறையாத ஒரு அதிர்ச்சி சம்பவமாக வரலாற்றில் பதிவாகியது.

பிக்குகள் கொலை செய்யப்பட்ட பஸ் வண்டியை பயன்படுத்தி, கொலை சம்பவம் இடம்பெற்றதை தத்ரூபமாக விளக்கும் வகையில் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அரந்தலாவ நினைவு தூபி ஒரு இனத்திற்கு மட்டும் உரிய அடையாளமல்லவெனவும், சமாதானத்தை நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் உரியதெனவும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எதிராளியை நேசிக்கும் எதிர்கால சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு பாடுபடுவது அனைவரது பொறுப்பெனவும் அவர் தெரிவித்தார்.

எமக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. 30 வருடங்களாக அபிவிருத்தி அடையாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு பிள்ளைகளின் கல்வியில் அக்கறைச் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நான் மக்களிடம் விடுக்கின்றேன். சிறந்த பிரஜையை உருவாக்குவதற்கு சிறந்த கல்வி அறிவுடைய மக்களை உருவாக்க வேண்டும். மாணவர்களை உரிய வேளையில் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை தோட்ட வேலைகளிலும் சொந்த வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டாம். பாடசாலைக்கு அனுப்புங்கள். மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம். எதிர்காலத்தில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட கல்வியில் நாம் முழுமையான பிரஜையாக மாற வேண்டும்.

ஆகவே இதுவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ உரிய அடையாளமல்ல. இது இலங்கை மக்கள் மற்றும் உலகத்தில் சமாதானத்தை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் உரியவொரு அடையாளமாகும். அதுதான் எமது நோக்கமும் ஆகும்.

அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், தலைமையிலான மகா சங்கத்தினர் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ன மற்றும் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபி;ட்டிய, ரி.பி.ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம , கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், உள்ளிட்ட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சகல சமயங்களினதும் விழாக்களை கொண்டாடி சமயங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தட்டாம். மஹிந்தர்.
»  காணிச்சட்டத்தினை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றுவீர். மஹிந்தர் உத்தரவு!
» மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..
» ஏ.பி.பரதனின் பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் அதிகாரம் வழங்குதலும் (அச்சுதமேனன் நினைவுச் சொற்பொழிவு)
» மஹிந்தர் டோக்கியோவில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum